விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஜெயங்கொண்டம் ஒன்றிய மாநாடு
19 Jul 2026, 10:25 pm
<p><strong>விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஜெயங்கொண்டம் ஒன்றிய மாநாடு</strong></p><p>அரியலூர், ஜூலை 19- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய மாநாடு, ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கந்தசாமி துவக்க உரை நிகழ்த்தினார். முன்னதாக ஒன்றிய செயலாளர் ஆகாசவீரன் வரவேற்று பேசினார். அஞ்சலி தீர்மானத்தை ஜி. முனியாண்டி வாசித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடாசலம் மற்றும் சொக்கலிங்கம், தியாகராஜன், இந்திரா, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் அ. பழனிச்சாமி, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் விவசாயிகளுக்கு செய்யப்பட வேண்டிய சலுகைகள் குறித்து விளக்கம் அளித்து நிறைவுரையாற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவராக சுந்தரமூர்த்தியும், செயலாளராக ஜி. ஆகாசவீரனும், பொருளாளராக முனியாண்டியும், துணைத் தலைவராக எஸ். மீனாவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். துணைச் செயலாளர் மணியம்மாள் நன்றி கூறினார்.</p>
