வேளாண் கல்லூரி மாணவிகளின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
22 Feb 2026, 3:26 pm
<p><strong>வேளாண் கல்லூரி மாணவிகளின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி </strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.22- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கீழபுனல்வாசல் கணேசா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உசிலம்பட்டி ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள், தங்களது கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பேரணியை ஒருங்கிணைத்தனர். “மழைநீரைச் சேமிப்போம், பூமியைப் பாதுகாப்போம்’’ என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, கல்லூரி இயக்குநர் பாண்டியராஜன், வேளாண் திட்டப் பொறுப்பாளர்கள் சுந்தரவடிவு, உதவிப் பேராசிரியர் அருண்குமார், இணை பேராசிரியர் கற்பகவல்லி, உதவி பேராசிரியர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி அமைந்தது. இதில், கல்லூரி மாணவிகள் குழுவினர், மழைநீர் சேமிப்பு முறைகள் குறித்துப் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.</p>
