முந்தய பக்கம்

100 நாள் வேலை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

29 Jan 2026, 5:39 pm
100 நாள் வேலை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்
<p><strong>100 நாள் வேலை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்</strong></p> <p>திருவள்ளூர், ஜன. 29- மீஞ்சூர் ஒன்றியம், திருப்பேர் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலை வழங்கப்படாததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்க ளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு வெறும் 30 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி யுள்ளனர். இது குறித்து சங்கத்தின் நிர்வாகிகள் இ.ராஜேந்திரன், ப.லோக நாதன் மற்றும் ஜி.கோவிந்தராஜ் ஆகி யோர் கூறுகையில், &quot;மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலையிட்டு திருப்பேர் கிராம மக்களுக்குத் தொடர்ந்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், கூலியை உயர்த்த வேண்டும் மற்றும் விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய அட்டைகளை வழங்க வேண்டும்&quot; என வலி யுறுத்தினர். மக்களின் அத்தியாவசியத் தேவைகளைத் தீர்க்க 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram