அகமலை மலைக்கிராம மக்களிடம் வனத்துறை கெடுபிடி கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு; தேனி ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
5 Oct 2026, 9:22 pm

அகமலை மலைக்கிராம மக்களிடம் வனத்துறை கெடுபிடி கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு; தேனி ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

தேனி, அக்.5-போடிநாயக்கனூர் வட்டத் துக்கு உட்பட்ட அகமலை மலைக் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளின் பராமரிப்புப் பணிகளுக்காக ஜல்லி, மணல், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி, மலைக்கிராம மக் கள்திங்கட்கிழமை தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.போடிநாயக்கனூர் வட்டத்துக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் சொக்கன்அலை, மண்டூர், படம்பூர்,கண்ணக்கரை, கரும்பாறை, அண்ணாநகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு மேல்பகுதியில் இருந்து சாலை வழியாக ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் மூலமேஇக்கிராமங்களுக்குச் செல்ல முடியும்.இந்நிலையில், மலைக் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

வனத்துறையின் கட்டுப்பாடுகளால் அவதி

இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறியதாவது:அவகோடா, எலுமிச்சை, காபி, மிளகு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து பல தலைமுறைகளாக அகமலைப் பகுதியில் வசித்து வருகிறோம். போதிய சாலை வசதி இல் லாததால், அவசர காலங்களில் சில பகுதிகளில் வசிப்பவர்களை டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.சோத்துப்பாறை அணை முதல் அகமலை வரையிலான நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சாலைப் பணிகள் வனத்துறையின் ஆட்சேபணையால் பாதிக்கப்பட் டுள்ளன.இந்நிலையில், தற்போது குடியிருப்புகளின் பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மலைக்கிராம மக்கள் மேலும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றனர்.

வனச்சரகர் அலுவலகத்துக்கு அலையும் நிலை

கட்டுமானப் பொருட்களை மலைக் கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பொதுமக்கள், முன்கூட் டியே வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்ட இடத்துக்கான பட்டா, சிட்டா, அடங் கல் மற்றும் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் நகல்களில் வனச்சரகரின் அனுமதி கையொப்பம் பெற்ற பின் னரே சோத்துப்பாறை அணை அருகேயுள்ள சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல அனுமதிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது.

இதற்காக அகமலையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேனி வனச்சரகர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்து செல்ல வேண்டியிருப்பதால், கால விரயம் மற்றும் பொருளாதாரச் சிரமம் ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.எனவே, வழக்கத்தில் இல்லாத புதிய நடைமுறைகளை அமல் படுத்தி மலைக்கிராம மக்களுக்கு ஏற்படுத்தப்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதற்கான விதிமுறைகளில் உரிய தளர்வுகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.