தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லி போராட்டத்தில் அடக்குமுறை ஏவிய ஒன்றிய அரசு! தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் போராட்டம்

10 Oct 2026, 11:40 pm
தில்லி போராட்டத்தில் அடக்குமுறை ஏவிய ஒன்றிய அரசு! தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் போராட்டம்

தில்லி போராட்டத்தில் அடக்குமுறை ஏவிய ஒன்றிய அரசு! தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் போராட்டம்

கோவை, அக்.10-தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி, தில்லியில் ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது அடக்குமுறை ஏவிய ஒன்றிய அரசை கண்டித்து,தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

நாட்டின் ஜனநாயக அமைப்புகளையும், தேர்தல் முறைகளின் மாண்பையும் குலைக்கும் வகையிலான எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி சனியன்று தில்லியில் அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை தில்லி காவல் துறையினர் அடாவடியாக கைது செய்தனர். அடக்குமுறை ஏவிய, மோடி மற்றும் அமித்ஷா தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

அதன்ஒருபகுதியாக, கோவை, காந்திபுரம்அருகே உள்ள லாலா கார்னர் பகுதியில் நடைபெற்ற மறியலுக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். இதில்,சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமார் கே.எஸ்.கனகராஜ், என்.ஆர்.முருகேசன், என்.ஆறுச்சாமி, வி.இராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட இணைச்செயலாளர் ஜேம்ஸ், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாணவர், வாலிபர்,மாதர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனையடுத்து அனைவரையும் காவல் துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர்.

சேலம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ மாவட்டச் செயலாளர் என்.கே.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில்,சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஐ (எம்எல்) விடுதலை மத்தியக்குழு உறுப்பினர் சந்திரமோகன், மாவட்ட நிர்வாகி வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநகர நான்காவது மண்டலச் செயலாளர் கே.கணேசன் தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரா தேவி, சிபிஐ புறநகர், மாநகர் மாவட்ட துணைச்செயலாளர்கள் நதியா, வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பா.கவிதா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ், ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர்எஸ்.கலைச்செல்வம், ஒன்றியச் செயலாளர் வி.பி.சாமிநாதன், சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் கே.கோவிந்தராஜ், மாநிலக்குழு உறுப்பினர் சி.முருகன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு சூரம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ நிர்வாகி சி.பாலமுருகன் தலைமை வகித்தார். சிபிஐ நிர்வாகி சி.துளசிமணி, சிபிஐ(எம்எல்) விடுதலை நிர்வாகி வி.கார்த்திகேயன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, கே.ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்பிரமணியன், நகரச் செயலாளர் வி.பாண்டியன், தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.