தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசே, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறுக! இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

20 May 2026, 11:05 pm
மோடி அரசே, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறுக! இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
<p><strong>மோடி அரசே, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறுக! இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!</strong></p><p>சென்னை, மே 20 - ஏழை - நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம், ஒன்றிய பாஜக அரசு நடத்திவரும் பொருளாதாரத் தாக்கு தலைக் கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி யும் இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் புத னன்று (மே 20) ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. இதனொரு பகுதியாக சென்னையில் மிண்ட் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்.) லிபரசன் விடுதலை மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, விசிக பொதுச்செயலாளர் து. ரவிக்குமார் எம்.பி. ஆகியோர், பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்கள் எம். ராமகிருஷ்ணன், ஆர். வேல்முருகன், ஜி. செல்வா, மாநிலக்குழு உறுப்பினர் எல். சுந்தரராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளர்கள் வேம்புலி வெங்கடேசன், வரதன், எஸ்.கே. சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.