தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசியல் பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசு: மார்க்சிஸ்டுகள் ஆவேச ஆர்ப்பாட்டம்

27 May 2026, 11:45 pm
அரசியல் பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசு: மார்க்சிஸ்டுகள் ஆவேச ஆர்ப்பாட்டம்

அரசியல் பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசு: மார்க்சிஸ்டுகள் ஆவேச ஆர்ப்பாட்டம்

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், இதனை எதிர்த்து தில்லியில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் கண்டித்து புதனன்று (மே 27) தமிழ்நாடு முழுவதும் ஆவேசப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகே கட்சியின் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் உள்ளிட்டோர் பேசினர்.

மயிலாப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் ஐ,ஆர்.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவொற்றியூர் வடக்கு மற்றும் மேற்குபகுதி குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் அஜாக் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. இதில் சிபிஎம் வடக்கு பகுதி செயலாளர் கதிர்வேல் , தெற்கு பகுதி செயலாளர் ஆர்.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர் ஆர் ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியம், பகுதி குழு உறுப்பினர்கள் கே. வெங்கட் ஐயா, சுரேஷ் பாபு, கஸ்தூரி, அருமை ராஜ், மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் அகல்யா ஆகியோர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா தலைமையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கேரள முன்னாள் முதல்வரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் நடத்திய தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதிக்குழுக்கள் சார்பில் தண்டையார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.