தீக்கதிர் உலக செய்திகள்
27 Aug 2026, 9:57 pm

தீக்கதிர் உலக செய்திகள்

ஆப்பிரிக்க சுரங்கங்களில் தொடர் விபத்துக்கள் : தீர்வு என்ன?

கேமரூன் நாட்டின் எல்லைக்கு அருகே உள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் (CAR) ஜாம்போயே பகுதியில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்றில் ஆகஸ்ட் 18 அன்று மண் சரிவுஏற்பட்டு பெரும் விபத்து நிகழ்ந்தது.இந்த மண்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்விபத்தை தொடர்ந்து, ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள்எந்தளவுக்கு ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றுகிறார்கள் என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

2026 பிப்ரவரி, மார்ச் மற்றும்ஜூன் மாதங்களில் இருந்து மத்தியஆப்பிரிக்கக் குடியரசு பல மோசமான சுரங்க விபத்துக்களைச் சந்தித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டம்

முழுவதும், நிலவும் வேலயின்மை, வறுமை ஆகியவை மக்களை கொடும் வறுமையில் தள்ளுகிறது. அதில் இருந்து தப்பிக்க வேறுவழியின்றி குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான முறையில் சுரங்கத்தில் வேலை செய்கின்றனர்.

மேம்பட்ட தொழில்நுட்ப கருவிகள் இல்லாமல் மனிதர்களின் உழைப்பால் மட்டுமே தோண்டப்படுகின்ற தங்கச் சுரங்கச் சமூகங்களைப் பற்றி ஆய்வு செய்த கென்ய ஆராய்ச்சியாளர் பெனடிக்ட் அமினர்,ஒவ்வொரு சுரங்க விபத்துகளுக்கும் உடனடியாக கூறப்படுகின்ற காரணங்களைத் தாண்டி இந்த பிரச்சனை புரிந்து கொள்ளப்பட வேண்டும் என கூறுகிறார்.தொழிலாளர்கள் குறைந்த தொழில்நுட்ப அறிவு, அடிப்படை உபகரணங்கள் மற்றும் போதிய பாதுகாப்புஅமைப்புகள் இல்லாமல் வேலை செய்யும் போது, இத்தகைய சுரங்கங்கள் ஆபத்தான விபத்துக்களுக்கு ஆளாகின்றன எனவும் கூறினார்.

சுரங்கத்திற்கு உள்ளே சரிந்து விழாமல் தடுக்க முறையான இரும்பு பாலங்கள் அமைக்காமல் மரக்கட்டைகள் பயன்படுத்துவது, வெள்ளப்பெருக்கு, போதிய காற்றோட்டமின்மை, பாதுகாப்பற்ற முறையில் நடத்தப்படும் சுரங்க வெடிவைப்பு நிகழ்வுகள், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது, போதிய அளவு மீட்பு பணிக்கான தயார்நிலை இல்லாத சூழல் ஆகியவையே சுரங்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முதன்மை அபாயங்கள் என அவர் பட்டியலிட்டுக் காட்டினார்.

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் இருக்க வேண்டும். அது அவர்களது உரிமை. அதேபோல அவர்க

ளின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கங்களுக்கு உள்ளது. பிரச்சனை என்னவென்றால், புவியியல் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும், அதிநவீன தொழில் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை பயன்

படுத்துவதற்கும், அவசரகால மீட்பு உபகரணங்களைப் வாங்குவதற்கும், தொழில்முறை ரீதியாக சுரங்கங்களை கையாள்வதற்கு தேவையான பொறியியல் ஆலோசனையைப் பெறுவதற்கும் தேவையான வசதிகள் தொழிலாளர்களிடம் இருப்பதில்லை. அது அந்த சுரங்கங்களை கட்டுப்படுத்தும் நபர்களிடம் மட்டுமே உள்ளது.

சுரங்கத்திற்கு உரிமம் வழங்குவது, சுற்றுச்சூழல் மேலாண்மை, சுரங்கப் பாதுகாப்பு தொடர்பான விதிகள் உட்பட, கைவினை மற்றும் சிறிய அளவிலான சுரங்கங்களைக் கட்டுப்படுத்தும் சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை உருவாக்கினாலும் அது காகிதத்தில் எழுதப்பட்ட சட்டமாக உள்ளதே தவிர தொழிலாளர்களை பாதுகாக்கவில்லை. மற்றொரு புறம் சுரங்கத்திற்கு உரிமம் வழங்குவதில் பெரும்ஊழல் நடக்கிறது. அதற்காக உரிமம் பெற்று சுரங்கம் நடத்தும் நிறுவனங்கள் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்கின்றன என்று அர்த்தம் அல்ல. மாறாக அரசே சட்ட புறம்பான சுரங்கங்கள் இயங்கவும் தொழிலாளர்களின் பாதுகாப்பைகைகழுவி விடவும் காரணமாக உள்ளன.

சுரங்கத்திற்கு வழங்கப்படும் அனுமதி துவங்கி, தொழில்நுட்ப உதவி, பாதுகாப்பான உபகரணங்கள், பொருத்தமான நிதி, புவியியல் தகவல்கள், பயிற்சி, வெளிப்படையான சந்தைகள் மற்றும் அரசு சேவையின் பலன்களை தொழிலாளர்களுக்கு சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது வரையிலான நடைமுறைகளைநெறிப்படுத்த வேண்டும்.

தொழிலாளர்கள் பொதுவாக பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சுரங்கத் தொழிலையே விரும்புகிறார்கள், ஆனால் அதை அவர்கள் அடைய வேண்டும் என்றால் அதற்கு அரசின் ஆதரவு தேவை.சுரங்கங்களை சட்டவிரோதமானவை என்று அறிவிப்பது மட்டுமே மக்களை அவற்றுக்குள் தள்ளும் பொருளாதார நிலைமைகளை மாற்றி விடாது. பாதுகாப்பற்ற ஒரு சுரங்கத்தை மூடும்போதுஅங்குள்ள தொழிலாளர்கள் மற்றொரு பாதுகாப்பற்ற சுரங்கத்திற்கு தான் செல்கிறார்கள். எனவே முழுமையான மறுசீரமைப்பு தேவை என அமினர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதத்தை நிராகரிக்க பாதுகாப்பு அவைக்கு கோரிக்கை

அமெரிக்காவின் பொருளாதாரப்போர் பிரச்சாரத்தை நிராகரிக்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு அவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடனான நியாயமான வர்த்தகத்தை மேற்கொள்ளும் பிற நாடுகளை எங்களுடனான உறவில் இருந்து துண்டிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட இச்செயல் ஒரு ‘பொருளாதார பயங்கரவாதம்’ என்றும் விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் நியாயமற்ற தடைகளை வெளிப்படையாகக் கண்டித்து நிராகரிக்க வேண்டும். அமெரிக்காவால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஏற்றுக்கொள்வதையோ அல்லது நடைமுறைப்படுத்துவதையோ உலக நாடுகள் மறுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா - கனடா மோதல்: கழிப்பறை வரை பாதிப்பு

அமெரிக்கா-கனடாவுக்கு இடையிலான வர்த்தகப்பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தோல்வியடைந்தது. ஒப்பந்தத்தில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்ததாக இரு தரப்பும் பரஸ்பரம்குற்றம் சாட்டிக்கொண்டன. கனடா பொருட்கள் மீது உடனடியாக டிரம்ப் 50 சதவிகித வரி விதித்தார். இதற்குப் பதிலடியாக கனடா சுமார் 700 அமெரிக்கப்பொருட்கள் மீது 50 சதவிகிதம் வரி அறிவித்தார். இதில் காகிதப் பொருட்களே அதிகம். எனவே அமெரிக்க மக்கள்அதிகளவில் பயன்படுத்தும் கழிவறைக்கான காகித உருளைகளின் விலை அதிகரித்துள்ளது. ஏற்கெனவேஅத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு தற்போது கூடுதல்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.