ஆப்கனில் 1.3 கோடி மக்கள் உணவு கிடைக்காமல் உள்ளனர்
12 May 2026, 11:58 pm

ஆப்கனில் 1.3 கோடி மக்கள் உணவு கிடைக்காமல் உள்ளனர்

காபூல், மே 12 - ஆப்கானிஸ்தானில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக 1.3 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருவதாக உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பாகிஸ்தானுடன் ஏற்படும் மோதல், போர்ப் பதற்றங்கள் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், இது நலிவடைந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கப் பயன்படுத்தப்படும் சத்தான உணவுப் பொருட்களின் விநியோகம் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் உதவி வழங்கும் பணிகளைப் பாதித்துள்ள தாகவும் உலக உணவுத் திட்டம் கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, ஆப்கானிஸ்தானில் சுமார் 1.38 கோடி மக்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். மேலும், சுமார் 50 லட்சம் குழந்தைகளும், கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்களும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.