வனப்பரப்பை 33 சதவிகிதமாக அதிகரிக்கத் திட்டம் ‘காடுகள் வளர்ப்புக் கொள்கை- 2026’ வெளியீடு!
4 Mar 2026, 5:01 pm
<p><strong>வனப்பரப்பை 33 சதவிகிதமாக அதிகரிக்கத் திட்டம் ‘காடுகள் வளர்ப்புக் கொள்கை- 2026’ வெளியீடு!</strong></p>
<p>சென்னை, மார்ச் 4 - தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். மாநிலத்தின் வனப்பரப்பை 33 சதவிகிதமாக அதிகரிக்கும் நோக்கில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்களின் தேவையை கருத்தில் கொண்டு, வனங்களுக்கு வெளியே மரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் தேக்கு, சந்தனம், செம்மரம், ஈட்டி போன்ற உயர்மதிப்புள்ள மரங்களை விவசாய நிலங்களில் வளர்க்கவும் திட்டம் ஊக்குவிக்கிறது. மரவளர்ப்பு நடைமுறைகளை எளிதாக்குதல், சிறப்பு வேளாண் காடு வளர்ப்பு மண்டலங்கள் அமைத்தல், கார்பன் சேமிப்பு அதிகரித்தல், தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்குக் கொண்டு வருதல், தரமான மரக்கன்றுகள் வழங்குதல், வனப்பொருட்கள் தொடர்பான சந்தை இணைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
