தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூருக்கு தேவையான பணிகளை நிறைவேற்ற ஏஇபிசி கோரிக்கை

11 May 2026, 12:07 am
திருப்பூருக்கு தேவையான பணிகளை நிறைவேற்ற ஏஇபிசி கோரிக்கை

திருப்பூருக்கு தேவையான பணிகளை நிறைவேற்ற ஏஇபிசி கோரிக்கை

திருப்பூர், மே 10- திருப்பூருக்கு தேவையான பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வ ராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு, ஏஇபிசி தலைவர் ஏ. சக்திவேல் கோரிக்கை விடுத்துள் ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற் றும் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதி துறையின் சார்பில், தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித் துக் கொள்கிறோம். முதலமைச்ச ரின் துடிப்பான மற்றும் தொலை நோக்கு கொண்ட தலைமையின் கீழ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக நலன் மற்றும் அனைவரை யும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றத்தில் புதிய உயரங் களை எட்டும் என்ற நம்பிக்கையுள் ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழில் குழுமம் இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி யில் சுமார் 68% பங்களிப்பை வழங்கி, உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சந்தைகளில் ஆண்டு தோறும் ரூ.70 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட வர்த்தகத்தை உரு வாக்குகிறது.

வேலைவாய்ப்பு நகரம்

இந்த துறை நேரடியாக 10 லட்சத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்க ளுக்கு வேலை வாய்ப்பை வழங்கு கிறது. இவர்களில் சுமார் 65% பெண் கள் ஆவர். பெண்கள் வேலை வாய்ப்பை அதிக அளவில் உரு வாக்கும் முக்கியத் துறையாக இது விளங்குகிறது. இத்துறையில் உள்ள நிறுவனங்களில் சுமார் 90% சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங் கள் ஆகும். விவசாயத்திற்குப் பிறகு அதிக வேலைவாய்ப்பை வழங்கும் இரண்டாவது மிகப் பெரிய துறையாக ஆடைத் தொழில் திகழ்கிறது. பெண்கள் அதிகாரம ளித்தல், புலம்பெயர் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் மற்றும் நாட் டிற்கு அந்நியச் செலாவணி ஈட்டு தல் ஆகியவற்றில் இத்துறை முக் கிய பங்கு வகிக்கிறது. இந்திய அரசு 37 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள் ளதால், இந்திய ஆடை ஏற்று மதிக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம், அடுத்த பத்து ஆண்டு கள் ஆடைத் துறைக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். குறிப் பாக, தமிழ்நாடு உலகத் தரத்தி லான நிலைத்தன்மை கொண்ட துணி மற்றும் ஆடை உற்பத்தி மையமாக உருவெடுக்க சிறந்த வாய்ப்பு உள்ளது.

தொழிலாளர் வீடுகள், விடுதிகள்

இந்தப் பின்னணியில், ஆடைத் தொழிலாளர்களுக்கான குறைந்த வாடகை வீடுகள் மற்றும் தொழிலா ளர் விடுதிகளை விரைவாக அமைத் தல், தொழிலாளர் விடுதிகளுக்கு, குடியிருப்பு மின் கட்டண விகிதம் வழங்குதல், பெண்கள் தொழிலா ளர்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் நலத் திட்டங் களை விரிவுபடுத்துதல், தொழிலா ளர் விடுதிகள் கட்டுவதற்கு 50% மூல தன மானியம் வழங்குதல்; மீத முள்ள தொகைக்கு வட்டி சலுகை வழங்குதல். ஏற்றுமதி நோக்கமு டைய சிறு குறு நடுத்தர நிறுவனங் களுக்கு சிறப்பு நிதி உதவி. பணிச் சுழற்சி நிதி எளிதாகக் கிடைக்க வட்டி சலுகை. நவீனமயமாக்கல், தானியங்கி இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு மூல தன மானியம்.

போக்குவரத்து வசதி

தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களுக்கான சாலை மற் றும் ரயில் இணைப்புகளை மேம்ப டுத்துதல். பல்வழி தளவாட வசதி களை ஊக்குவித்து ஏற்றுமதி செலவைக் குறைத்தல். தொழில்க ளுக்கு போட்டித்திறன் வாய்ந்த மின் கட்டணத்தை உறுதி செய்தல். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன் பாட்டை ஊக்குவித்தல். சாயக் கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலை யங்கள் மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பத்திற்கு ஆதரவளித் தல், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விதிமுறை களை எளிமைப்படுத்துதல். காலக் கெடுவுடன் செயல்படும் ஒற்றைச் சாளர அனுமதி முறை.

மேட் இன் திருப்பூர் பிராண்ட்

திருப்பூரில் சர்வதேச வாங்கு பவர்-விற்பனையாளர் சந்திப்பு கள் நடத்துதல். மேட் இன் திருப்பூர் என்ற உலகளாவிய பிராண்டை ஊக்குவித்தல். மாநில அளவிலான ஆடை மற்றும் ஜவுளி மேம்பாட்டு வாரியம் அமைத்தல். திருப்பூர் பின்னலாடை வளர்ச்சி இயக்கம் தொடங்குதல். திருப்பூர் ஆடை ஏற்றுமதி துறை 2030க்குள் ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த அரசின் ஆதரவுடன் இலக்கை அடைய முடி யும். இதன் மூலம் பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்க ளிப்பு கிடைக்கும். உங்கள் முயற் சிக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்போம் என்று ஏஇபிசி தலை வர் ஏ.சக்திவேல் கூறியுள்ளார்.​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.