தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

4 Nov 2026, 8:55 pm
வாய்ப்பு வாசல்

வாய்ப்பு வாசல்

ஒன்றிய அணுசக்தி கல்வி நிறுவனத்தில் 254 காலிப் பணியிடங்கள்

ஒன்றிய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் அணுசக்தி கல்வி நிறுவனத்தில் (AEES) முதல்வர், துணை முதல்வர், முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 254 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி – பிளஸ் 2 வில்குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி, பட்டப்படிப்பு, முதுகலை அல்லது ஆசிரியர் பயிற்சி (B.Ed/D.El.Ed/CTET) முடித்திருக்க வேண்டும். சில பணிகளுக்கு பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு – நவம்பர் 22, 2026 தேதியின்படி 30 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் இதரப்பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை – கணினி வழித் தேர்வு மற்றும் பணியிடங்களுக்கு ஏற்ப திறன் தேர்வு / நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் – பொதுப் பிரிவினருக்கு ரூ.750 மற்றும் செயலாக்கக் கட்டணம் ரூ.250. பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்இல்லை செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை –கல்வித்தகுதி, தேர்விற்கான பாடத்திட்டம், காலிப்பணியிடப் பகிர்வு, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான தகவல்களைபெறhttps://www.aees.gov.in/recruitment.htmlஎன்றஇணையதளத்தைபார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 22, 2026 ஆகும்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 350 காலிப்பணியிடங்கள்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் புரொபேஷனரி இன்ஜினியர் (Probationary Engineer) பணிக்கு 350 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி – எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் நான்கு ஆண்டு பி.இ/பி.டெக்/பி.எஸ்சி. இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – அக்டோபர் 1, 2026 தேதியின்படி பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் நலி

வடைந்த பிரிவினருக்கு அதிகபட்ச வயது 25 ஆகும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டிபிரி வினர்களுக்கு 5 ஆண்டுகளும் இதரப்பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை – கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் – பொது, ஓபிசிபிரிவினர் களுக்கு ரூ.1,180 (ரூ.1,000 + ஜிஎஸ்டி). எஸ்சி/எஸ்டி,

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தின ருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை – தேர்விற்கான பாடத்திட்டம்,

காலிப்பணியிடப் பகிர்வு, வயதுவரம்பு போன்ற முழு

மையான தகவல்களைபெறhttps://bel-india.in/என்ற இணையதளத்தைபார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 18, 2026 ஆகும்.

நினைவூட்டல்ரயில்வே துறை சார்பாக வெளியான இரண்டு வேலைவாய்ப்புகளுக்கும் விண்ணப்பிக்க நாட்கள் உள்ளன. 1.தொழில்நுட்பம் சாராத பணிகள்(பட்டப்படிப்பு) – 06.11.20262.தொழில்நுட்பம் சாராத பணிகள்(+2) - 13.11.2026தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை (G/O/ (Ms).No. 126) வெளியாகியுள்ளது. மொத்தம் 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். இந்த நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக மேற்கொள்ளப்படும். இந்தப் பணியிட நிரப்புதல் இரண்டு கட்டங்களாக இருக்கும்.

1.முதல் கட்டமாக 2027 ஆம் ஆண்டில் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

2.இரண்டாம் கட்டமாக, 2028 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

மற்ற தேர்வுகளுக்கு வெளியிடுவது போன்று, இந்தத் தேர்வுக்கும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அறிவிக்கை வெளியாகும். இந்தப் பணிநியமனம் பெறுவோருக்கான சம்பள விபரங்களும் அரசாணையில் இடம் பெற்றுள்ளன.

இப்பணிக்கான அடிப்படைச் சம்பளம் (Basic Pay) ₹18,800 முதல் ₹59,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 60% அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை (HRA), மருத்துவப் படி (Medical Allowance) மற்றும் சி.பி.எஸ் (CPS) பங்களிப்பு உட்பட ஒரு நபருக்கான மாதச் செலவினம் ₹35,548 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.