அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க புதிய சுத்திகரிப்பு நிலையம்
21 Jun 2026, 1:19 am
<p><strong>அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க புதிய சுத்திகரிப்பு நிலையம்</strong></p><p>சென்னை, ஜூன் 20- சென்னை அடையாறு ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து, ஆற்றை மீட்டெடுக்கும் நோக்கில் பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பு பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறு வனங்களுடன் கைகோர்த்துள்ளது. அடையாறு - பக்கிங்காம் கால்வாய் சந்திப்பு அருகே சவுத் லாக் தெருவில் நாள் ஒன்றுக்கு 6.25 லட்சம் லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட புதிய நடமாடும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அமேசான் நிறுவனத்தின் ரூ.10 கோடி நிதியுதவியுடன், அடுத்த 10 ஆண்டு களுக்கான பராமரிப்பு உத்திரவாதத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நீர்வளத்துறை சுமார் 6,000 சதுர அடி நிலத்தை ஒதுக்கியுள்ளது. ‘எஸ்.ஐ.வி இம்பாக்ட்’ மற்றும் ‘செம்காட்’ ஆகிய அமைப்புகளின் கூட்டமைப்புடன் இணைந்து, ‘சென்னை ரெசிலியன்ஸ் சென்டர்’ என்ற தன்னார்வ அமைப்பு இத்திட்டத்தை ஒருங்கிணைக்கிறது. முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் இந்த அதிநவீன சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்படும் நீர், ஆற்றங்கரையோரம் நடப்படும் மரக்கன்று களுக்கும், ராஜீவ் காந்தி சாலை மையத்தடுப்புகளில் உள்ள செடிகளுக்கும் பயன்படுத்தப்படும். மேலும், இதில் ஒரு பகுதி நீர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஆற்றில் விடப்படும் என்றும், மீதமுள்ள நீரைத் தொழிற்சாலைகள் மற்றும் குடி யிருப்பு வளாகங்களின் வணிகரீதியற்ற பயன்பாட்டிற்கு மானிய விலையில் வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பின், மாம்பலம் கால்வாய் போன்ற நகரின் பிற நீர்நிலைகளிலும் இம்முறை விரிவு படுத்தப்படவுள்ளது.</p>
