அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
9 Mar 2026, 12:36 pm<p>அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.<br />
ஈரான், லெபனான் நாட்டின் மீது வலுக்கட்டாயமாக போர்தொடுத்து பல ஆயிரம் மக்களை குண்டு வீசி கொலை செய்து ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை கண்டித்து அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் தலைமையில் முற்போக்கு வழக்கறிஞர்கள் இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.<br />
போராட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் பி.ஜோதிகுமார் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் மாசேதுங், மாவட்ட நிர்வாகிகள் கோபால் சங்கர், அ.கரீம் ரஞ்சிதா, ஜான்சி ராணி, மற்றும் மக்கள் சிவில் உரிமை கழகம் தேசிய செயலாளர் பாலமுருகன், மக்கள் சிவில் உரிமை கழகம் மாநில துணை பொதுச்செயலாளர் சேகர் அண்ணாதுரை, ஐஏஎல் மாவட்ட செயலாளர் சக்திவேல், மக்கள் கண்காணிப்பகம் சார்பில் நிக்கோலஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும் ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.</p>
