தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வழக்கறிஞர் தோழர் உ. நிர்மலா ராணி நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி

16 Jun 2026, 10:30 pm
வழக்கறிஞர் தோழர் உ. நிர்மலா ராணி நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி

வழக்கறிஞர் தோழர் உ. நிர்மலா ராணி நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 16 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பின ரும், மகளிர் சட்ட உதவி மையத்தின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞரும், பெண்ணுரிமை போராளியுமான தோழர் டாக்டர் உ.நிர்மலா ராணி அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை திருச்சியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநகர் மாவட்டச் செய லாளர் எஸ். சரஸ்வதி தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் எஸ். ராகீலா பானு வரவேற்றார்.

தோழர் டாக்டர் உ. நிர்மலாராணி அவர்களின் உருவப்படத்தை, மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கே. பாலபாரதி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தோழர் நிர்மலா ராணி கணவர் வழக்கறிஞர் ராஜ்குமார், மகள் மதுவந்தி, மகன் சிபிநந்தன், மாதர் சங்கத் தின் அகில இந்திய துணை தலைவர்கள் உ.வாசுகி, எஸ். சுதா சுந்தர்ராமன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் எஸ். ஸ்ரீதர், சோக்கோ அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் செல்வகோமதி, மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிர மிளா, பொதுச் செயலாளர் அ. ராதிகா, மாநில துணைச் செயலாளர் பி. பூமயில், மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் அ. மல்லிகா, எல்.ஐ.சி. மகளிர் துணைக்குழு உறுப்பினர் க. கலை மணி, பாரதிதாசன் பல்கலைக் கழக பேரா சிரியர் சுபா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் வி. மாலதி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.