தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வழக்கறிஞர் இ.சுப்புமுத்துராமலிங்கம், தூத்துக்குடி

9 Apr 2026, 5:30 am
வழக்கறிஞர் இ.சுப்புமுத்துராமலிங்கம், தூத்துக்குடி

வழக்கறிஞர் இ.சுப்புமுத்துராமலிங்கம், தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்தி சிலை அருகில் மொபைல் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், 2020 ஜூன் 19 அன்று கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகப் பொய்க் குற்றச்சாட்டின்கீழ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் அவர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் ஜூன் 22, 23 தேதிகளில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்தச் செய்தி அறிந்து 23.06.2020 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் சென்றபோது, சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணியையும், மகள் பெர்சியாவையும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் நிலவியது.

மறைக்கப்பட்ட உண்மைகளும் வெளிவந்த சதிகளும்: ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதல், அவர்கள் நல்ல உடல்நலையில் இருந்ததாகப் போலி மருத்துவச் சான்றிதழ் பெற்றது வரை பல்வேறு சதித் திட்டங்கள் அரங்கேறின. குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன் என்பார், சாத்தான்குளம் இருந்த அரசு மனை நேரில் முறையாக ஆய்வு செய்யாமல், மருத்துவச் சான்றிதழ் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

வழக்கமாக அருகிலுள்ள திருவைவகுண்டம் சப் ஜெயிலிலோ அல்லது பேரூர் மாவட்ட சிறையிலோ வைக்கப்படாமல், வெகுதூரம் தள்ளியுள்ள கோவில்பட்டி சிறையில் அனுமதித்தது போலீசாரின் திட்டமிட்ட சதியை உறுதிப்படுத்தியது. உயர்மதிப்பிற்குரிய மதுரை கிளை இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.