தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

20 Feb 2026, 2:39 pm
சென்னை விரைவு செய்திகள்

அதிக லாபம் தருவதாக  ஆசை காட்டும் முதலீட்டு மோசடிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

கோயம்புத்தூர், பிப்.20- டிஜிட்டல் கட்டண முறைகள் மூத்த குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கி, அவர்களுக்கு நிதிச் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் வழங்கியுள்ளன. இருப்பினும், இப்பயனர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இணைய மோசடிகள் குறித்து ஒன்றிய அரசின் மத்திய  தேசிய கொடுப்பனவு கழகம்  விழிப்புணர்வு (என்பிசிஐ)  ஏற்படுத்தி வருகிறது.  சட்ட அமலாக்க அதிகாரிகள் போல மிரட்டிப் பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் கைது’, அதிக லாபம் தருவதாக ஆசை காட்டும் முதலீட்டு மோசடிகள் மற்றும் வங்கி விவரங்களைக் கோரும் பிஷிங் முறைகள் குறித்து முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், கணினியைச் சரிசெய்வதாகக் கூறித் தகவல்களைத் திருடும் தொழில்நுட்ப மோசடிகள் மற்றும் பணத்தைத் திரும்பத் தருவதாகக் கூறி அனுப்பப்படும் போலியான இணைய இணைப்புகள் குறித்தும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். அரசு அல்லது சட்ட அமைப்புகள் ஒருபோதும் தொலைபேசி வாயிலாகப் பணம் கேட்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, அறிமுகமில்லாத நபர்களிடம் கடவுச்சொல் உள்ளிட்ட ரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம்

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே  10 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம், பிப். 20- விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவைப் போலீசார் மீட்டனர்.  நகரக் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் இருந்தபோது, ரயில் நிலையம் அருகே ஒரு பை கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டனர். அதனைச் சோதனை செய்தபோது, சுமார் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. மர்ம நபர்கள் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிக்கல் ரயில்வே கேட்டில்  கார் மோதி விபத்து: ரயில்கள் தாமதம்

உளுந்தூர்பேட்டை, பிப்.20- கள்ளக்குறிச்சி மாவட்டம் பரிக்கல் ரயில்வே கேட்டில், (பிப். 19) வியாழன் இரவு அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில் கேட் சேதமடைந்தது. இதில் கார் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதனால் வந்தே பாரத் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகச் சென்றன. ரயில்வே பணியாளர்கள் கேட்டைச் சரிசெய்த பிறகு ரயில்கள் பயணத்தைத் தொடங்கின.

மணலி மாத்தூரில் இன்று மின்தடை

சென்னை, பிப். 20- மணலி மாத்தூர் பகுதியில் சனிக்கிழமை (பிப். 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகர்சன் கல்லூரி சாலை, வெஸ்ட் கார்டன், காத்தகுழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர், தீயம்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம், வடபெரும்பாக்கம் இன்டஸ்ட்ரியல் கார்டன், பார்வதிபுரம், ஸ்ரீநிவாசா மாடர்ன் டவுன், கன்னியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை, பிப்.20- சென்னை போரூர் டிஎல்எப்  வளாகத்தில் சுமார் 20,000 சதுர அடி பரப்பளவில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கார்ப்பரேட் அலுவலகத்தை அமைத்துள்ளது. இது ஆப்பிளின் உலகளாவிய செயல்பாடுகளை நிர்வகிக்கும் முக்கிய மையமாகத் திகழப் போகிறது. இதையொட்டி, பல்வேறு துறைகளில் தகுதியான இளைஞர்களைத் தேர்வு செய்யும் பணியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப நிபுணர், வணிக நிபுணர், உற்பத்தி தரக் கட்டுப்பாட்டு பொறியாளர், வணிக மேலாளர் மற்றும் பூச்சுத் துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். முழுநேரம், பகுதிநேரம் மற்றும் தற்காலிகப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பொறியியல், வணிகம் அல்லது விற்பனைத் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் அந்தந்த துறைகளில் போதிய அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பிக்கும் முறை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளத்திற்குச் சென்று, தேடல் பகுதியில் “சென்னை” என்று குறிப்பிட்டு உங்கள் தகுதிக்கு ஏற்ற பணியைத் தேர்வு செய்யலாம். அங்கேயே உங்கள் சுயவிவரக் குறிப்பைப் பதிவேற்றி விண்ணப்பிக்க முடியும். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி அதி கரித்து வரும் சூழலில், பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு இணையாகச் சென்னை தற்போது ஒரு பிரதான மையமாக உருவெடுத்துள்ளது. இதனால் தமிழக இளைஞர்கள் இனி ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற வெளி மாநிலங்களுக்குச் செல்லத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழும்பூர் ரயில் நிலையப் பாதை மாற்றம்  சிக்னல் கோளாறால் பயணிகள் அவதி

சென்னை, பிப். 20- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களின் பாதை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே சேவை முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக வழக்கமாக 10, 11ஆம் நடைமேடைகளில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் 5, 6ஆம் நடைமேடைகளில் இருந்து வியாழக்கிழமை நள்ளிரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களின் பாதை தற்காலிகமாக மாற்றம் செய்து 45 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை - தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமாக 208 மின்சார ரயில்கள் இயக்கப்படும் நிலையில், 164 ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை மாற்றம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்த நிலையில், சிக்னல் கோளாறு ஏற்பட்டு முதல் நாளிலேயே ரயில் சேவை முடங்கியது. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. காலையில் பணிக்கு செல்வோர், வெளியூர் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ரயில்களில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் சாரைசாரையாக பயணிகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து மின்சார ரயில்கள் நின்றது குறிப்பிடத்தக்கது.

கடற்கரை சவாரி குதிரைகளுக்கு உரிமம் பெற வேண்டும் சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை, பிப். 20 - கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தும் குதிரைகளுக்கு உரிமம் பெறுவதை சென்னை மாநகராட்சி கட்டாய மாக்கி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளியன்று (பிப்.20) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய உறுப்பி னர்கள், வார்டு மேம்பாட்டு நிதியை 80 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இந்த தொகைக்கான ஜிஎஸ்டியை மாநக ராட்சியே ஏற்க வேண்டும். நிலைக்குழு மற்றும் மண்டலக்குழு தலைவர்களுக்கு கார்களும், கவுன்சிலர்களுக்கு இருச்சக்கர வாகனமும் வழங்க வேண்டும். பதவி காலத்தில் உயிரிழக்கும் உறுப்பினர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் தர வேண்டும். கவுன்சிலர்களுக்கு ஓய்வூதியம் தர வேண்டும் என்று கோரினர்.  பெயர் மாற்றம் செய்க குறிப்பாக செம்மொழி பேசுகை யில், வள்ளலார் நகரில் உள்ள வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெயரை, வள்ளலார் நகர் மெட்ரோ நிலை யம் என மாற்ற வேண்டும். அதேபோன்று, அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் என்பதை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரினார். அவை நாகரீகம் மதிமுக உறுப்பினர் ஜீவன் பேசுகை யில், பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், பத்திரிகை மற்றும் ஊடக விளம்பரத்திற்காக கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்வதை கைவிட வேண்டும். அவை நாகரீகத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், விசிக உறுப்பினர் கோபி நாத், அம்மா உணவகங்களில் மூத்த குடி மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். குதிரை உரிமம் இதனை தொடர்ந்து, சென்னை மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை களில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரை களுக்கு 45 நாட்களில் உரிமம் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

புதுச்சேரியிலிருந்து  மது கடத்திய இருவர் கைது

விழுப்புரம்,பிப்.20- விழுப்புரம் அருகே மது கடத்தி வந்த இருவரை போலீ சார் கெங்கராம்பாளையம் அருகே கைது செய்தனர். மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுரளி மற்றும் காவலர்கள் தலைமையில் கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரியிலிருந்து மதுபானங்கள் எடுத்து செல்வது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மாநிலம் அரியூர் வட்டம், பங்கூர் செல்வா நகரைச் சேர்ந்த ராமானுஜம் மகன் பாலசுந்தரம் (54) மற்றும் புதுச்சேரி சின்னையன்பேட்டை கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் பிரகாஷ் (40) என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 1200 மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

காப்பீட்டு கோரிக்கைகளில் 99 விழுக்காடு தீர்வு

கோவை, பிப். 20- சுட் லைப் காப்பீட்டு நிறுவனம் தனது 17-வது ஆண்டு விழாவை ‘ஏக் சாத் (17)’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடியது.  2024–25 நிதியாண்டில், 30 நாட்களுக்குள் பெறப்பட்ட காப்பீட்டு கோரிக்கைகளில் 99.25% தீர்வுகளை வழங்கி, இந்தியாவின் முன்னணி 5 நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. தனது விநியோக வலையமைப்பை 171 கிளைகள் மற்றும் 20,000-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மூலம் விரிவுபடுத்தியுள்ள நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் வாட்ஸ்அப் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவையை எளிமையாக்கியுள்ளது. சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் தனிப்பயன் தீர்வுகளை வழங்குவதோடு, மாற்று விநியோக சேனல்கள் மூலம் பின்தங்கிய சந்தைகளிலும் நிறுவனம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

புழல் சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு

சென்னை, பிப். 20- சென்னை புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி  உயிரிழந்தார்.  சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செந்தில் (45). இவர் காசிமேடு காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, அதை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் புழல் தண்டனை சிறையில் அனுபவித்து வந்தார். இந்நிலையில் செந்தில், கடந்த ஜனவரி  26 அன்று புழல் சிறையில் உள்ள குளி யல் அறையில் திடீரென வழுக்கி விழுந்ததாக கூறப் படுகிறது.  இதில் தலையில் பலத்தக் காயமடைந்த செந்திலை சிறைக் காவ லர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செந்தில், வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

கலைஞர்களுக்கு அரசு விருதுகள்: ராணிப்பேட்டை ஆட்சியர் அழைப்பு

ராணிப்பேட்டை, பிப்.20-  ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை படைத்த கலைஞர்களுக்கு மாவட்டக் கலை மன்றம் சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இசை, நடனம், ஓவியம், சிற்பம், நாடகம், சிலம்பம் மற்றும் கரகாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள கலைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, வயது, முகவரி மற்றும் கலை அனுபவச் சான்றுகளுடன் வரும் பிப்ரவரி 28-க்குள் ‘உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, சின்ன காஞ்சிபுரம் - 631 502’ என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-27269148 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். தேமுதிகவின் முடிவு சரியான நகர்வு சோஷலிஸ்ட் ஜனதா கட்சி வரவேற்பு தஞ்சை, பிப்.20- தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், தேமுதிக எடுத்துள்ள முடிவு சரியான ஒன்று என சோஷலிஸ்ட் ஜனதா கட்சி  மாநிலத் தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “தமிழக அரசியல் கட்சிகள் கலக்கமுற்ற நிலையில் இருந்தபோது, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்  மிகச் சரியான அரசியல் காய் நகர்த்தலை மேற்கொண்டுள்ளார். ஆளாளுக்கு முன்வைத்த விமர்சனங்களைத் தகர்த்து எறிந்துவிட்டு, மத்தியில் உள்ள ஆட்சிக்கு எதிராகத் தெளிவான முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த முடிவால் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன. தமிழகத்தில் தற்போது ‘இந்தியா’ கூட்டணி மிகவும் வலிமையடைந்துள்ளதுஎன்று கூறியுள்ளார். இவ்வாறு தனது அறிக்கையில்  தஞ்சை இளஞ்சிங்கம் தெரி வித்துள்ளார்.

புழல் சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு

சென்னை, பிப். 20- சென்னை புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி  உயிரிழந்தார்.  சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செந்தில் (45). இவர் காசிமேடு காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, அதை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் புழல் தண்டனை சிறையில் அனுபவித்து வந்தார். இந்நிலையில் செந்தில், கடந்த ஜனவரி  26 அன்று புழல் சிறையில் உள்ள குளி யல் அறையில் திடீரென வழுக்கி விழுந்ததாக கூறப் படுகிறது.  இதில் தலையில் பலத்தக் காயமடைந்த செந்திலை சிறைக் காவ லர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செந்தில், வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.