தீக்கதிர் முக்கிய செய்திகள்
19 Jan 2026, 2:23 pm

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்!

சென்னை: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து வடகிழக்கு பருவமழை விடைபெற்றதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஜன.21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜன.22 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஜன.23 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என கூறப்பட்டு உள்ளது.

பேறுசார் குழந்தைகள் நலத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு

சென்னை: தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு களுள் ஒன்றான ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவ சேவைகள் வழங்கும் பொருட்டு, பேறு சார் குழந்தைகள் நலத்திட்டம் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ், நோயாளர் நலச்சங்கம் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ நேரங்களில் அறையினை தூய்மை யாக வைத்துக் கொள்ள செவிலியர்களுக்கு உதவியாக இருக்க ஆரம்ப சுகாதார நிலைய தூய்மை பணியினை மேற் கொள்ள ஆர்சிஹெச் தூய்மை பணியாளர்கள் அமர்த்தப் பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பேறுசார் குழந்தைகள் நலத் திட்ட பகுதி நேர தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப் பூதியம் ரூ.1,500 லிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.7,376 ஆக உயர்த்தி அதற்கான ஆணைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்களன்று வழங்கினார்.

தமிழகம் வரும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் செங்கல்பட்டு: ஒன்றிய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல்

பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வரு கிறார். மதுராந்தகத்தில் ஜன.23-இல் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி பொதுக் கூட்டத்துக்கு முன்னதாக ஜன.21 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல். ஜன.22 ஆம் தேதி என்டிஏ கூட்ட ணியில் மற்ற கட்சிகள் கூட்டணி ஒப்பந்தம் கை யெழுத்தாக உள்ளதாக வும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜன.22 ஆம் தேதி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின், ஜன.23 பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி தலைவர்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சி.பழனிசாமி மனு அளித்துள்ளார். கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. எடப் பாடி பழனிசாமி பதில ளிக்க உத்தரவிட்டு, வழக் கின் விசாரணை பிப்.13-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பதநீர் அருந்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தல்

சென்னை: மேற்கு வங்கத்தில் நிபா தொற்று பரவி வரும் நிலையில், பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம் என்று தமிழக சுகாதா ரத் துறை அறிவுறுத்தி யுள்ளது. பதநீர் அருந்து வதைத் தவிர்க்குமாறும் பொது சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் நிபா தொற்று பரவல் இல்லை என்றாலும், மக்கள் விழிப் புணர்வுடன் இருக்க வேண் டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.