முந்தய பக்கம்

கலப்பட பால் விநியோகம் ஆந்திராவில்  பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

22 Mar 2026, 3:06 pm
கலப்பட பால் விநியோகம் ஆந்திராவில்  பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
<p>கலப்பட பால் விநியோகம் ஆந்திராவில் &nbsp;பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு</p> <p>பாஜக கூட்டணி ஆளும் ஆந்தி ரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ராஜமகேந்திரவரம் பகுதியில் கடந்த &nbsp;பிப்ரவரி 22-ஆம் தேதி, ஒரு வியாபாரி யிடம் பால் வாங்கி அருந்திய பல குடும் &nbsp;பத்தினருக்கு உடல்நிலை மோசமடைந் தது. பாலைக் குடித்தவர்கள் சிறுநீரகம் செயலிழந்ததும், அதனைத் தொடர்ந்து சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட் டும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கிட்டத் &nbsp;தட்ட ஒரே வாரத்தில் 14 பேர் உயிரிழந்த னர். 5 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து &nbsp;வந்தனர். &nbsp;இந்நிலையில், ராஜமகேந்திரவரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று &nbsp;வந்த மேலும் 2 பேர் ஞாயிறன்று உயிரி ழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மேலும் &nbsp;3 பேர் ராஜமகேந்திரவரம் மருத்துவமனை களில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற னர். அவர்களின் நிலைமை கவலைக்கிட மாக இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. &nbsp;இதனால் பலி எண்ணிக்கை உ யரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை கிழக்கு கோதாவரி மாவட்ட சுகாதார அதிகாரி கே.வெங்கடேஷ்வர ராவ் உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram