தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கட்சித் தாவல் புகார் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது!

26 May 2026, 9:18 pm
கட்சித் தாவல் புகார் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது!

கட்சித் தாவல் புகார் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது!

சென்னை, மே 26 - அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோரின் ராஜினாமா கடிதங்களை ஏற்கக் கூடாது என்றும், இனி வேறு யார் கொடுத்தாலும் அதையும் ஏற்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவைத் தலைவரிடம் செவ்வாய்க்கிழமை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததை எதிர்த்து அதிமுக அளித்திருக்கும் மனுவில் நடவடிக்கை எடுக்காமல் ராஜினாமாவை ஏற்றது சரியல்ல என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.

தலைவர் ஜேசிடி பிரபாகரை செவ்வாய்க்கிழமை (மே 26) அவரது அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், இன்பதுரை ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினர்.

கொறடா உத்தரவை மீறி வாக்களித்த நடவடிக்கை குறித்த மனுவில் முதலில் முடிவெடுக்காமல் ராஜினாமாவை எப்படி ஏற்கலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு விளக்கம் அளித்த ஜே.சி.டி. பிரபாகர், அதிமுகவின் மனு குறித்து விரிவாக ஆய்வு செய்த பிறகே முடிவெடுப்பேன் என்றும், தனக்கு யாரும் கெடு விதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 நிமிடத்தில் லேமினேஷன் அட்டை கொடுத்தது எப்படி? அதிமுக கொறடாவாக நியமிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “ராஜினாமா செய்த 5 நிமிடத்திலேயே அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்யப்பட்ட தவெக உறுப்பினர் அட்டை வழங்கியது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தலைமைச் செயலகத்தில் கட்சி இணைப்பு விழா நடத்தியது குறிப்பிடத்தக்க விஷயம் என்றும், அரசு இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கிறார்கள் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதை ஊக்குவித்தால் குதிரை பேரம் குதிரை வேகத்தில் நடக்கும் என்றும் அவர் எச்சரித்தார். சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி கடிதம் கொடுத்திருப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.

நீதிமன்றம் செல்வோம் அவரைத் தொடர்ந்து பேசிய இன்பத்துரை, “மூவரின் ராஜினாமாவை ஏற்ற முடிவை திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் சபாநாயகர் முடிவில் தலையிடலாம்” என்றும் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.