பதவிக்காக போலி சாதிச்சான்றிதழ் அளித்து மோசடி: அதிமுக பிரமுகருக்கு சிறை தண்டனை விதிப்பு
13 May 2026, 11:10 pm
<p><strong>பதவிக்காக போலி சாதிச்சான்றிதழ் அளித்து மோசடி: அதிமுக பிரமுகருக்கு சிறை தண்டனை விதிப்பு</strong></p><p>ஈரோடு, மே 13- பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போலி சாதிச்சான்றிதழ் அளித்து மோசடி செய்த அதிமுக பிரமுகருக்கு 3 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு பிரிவில் 2 ஆண்டு கள் சிறை தண்டனையும் விதித்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமா ரெட்டியூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். அதிமுக பேரூராட்சி செயலாளராக பொறுப்பு வகித்த இவர், கடந்த 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்த லில் பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அம்மாபேட்டை பேரூ ராட்சித் தலைவர் பதவிக்கு, பழங்குடி இனத்தவர் என போலியான சாதிச் சான்றிதழை தயாரித்து அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அம்மா பேட்டை போலீஸார் நடத்திய விசார ணையில், கடந்த 19.12.1995 இல் சேலம் கோட்டாட்சியர் அலுவலகம் வழங்கி யது போன்று போலியான சாதிச் சான்று தயாரித்து, உள்ளாட்சித் தேர்தலில் மனு தாக்கல் செய்தபோது சமர்ப்பித்து அரசு அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி மோசடி செய்தது உறுதியா னது. பவானி குற்றவியல் நடுவர் நீதிமன் றம் 1 இல் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி ஜெ.ராஜ்குமார் விசா ரித்தார். குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அதி முக பிரமுகர் டி.செந்தில்குமாருக்கு போலியான சாதிச் சான்றிதழ் அளித்து மோசடி செய்தல், போலியாக சான்றிதழ் தயாரித்தல், ஏமாற்றும் நோக்கில் போலிச் சான்றிதழ் அளித்தல் ஆகிய பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், போலியான ஆவணம் என தெரிந்தே பயன்படுத்திய பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என வும் நீதிபதி உத்தரவிட்டார்.</p>
