தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்தது எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி போர்க்கொடி

11 May 2026, 10:29 pm
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்தது  எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி போர்க்கொடி

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்தது எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி போர்க்கொடி

சென்னை: அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியை முன்வைத்து, அக்கட்சிக்குள் கடும் அதிகாரப் போட்டி வெடித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாள ருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் அணிதிரண்டிருப்பது அதிமுகவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் மொத்தம் உள்ள 47 சட்டமன்ற உறுப்பி னர்களில், எஸ்.பி. வேலுமணியை சட்டமன்றக் கட்சித் தலைவ ராக தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி 30 எம்எல்ஏ க்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதம் தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று அந்தக் கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.

இதற்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏ.க்கள் தனியாக ஆதரவுக் கடிதம் அளித்திருந்த நிலையில், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதையும் தீர்மா னிக்கும் முக்கியத்துவம் கொண்ட இந்தப் பதவியை கைப்பற்ற இரு தரப்பினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை (மே 12) அன்று நடைபெற உள்ள சபாநா யகர் தேர்தலுக்கு முன்னதாக ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பிரச்சினை, அதிமுக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “இதுவரை காத்திருந்தீர்கள், இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்; அனைத்தும் விரைவில் தெளிவாகும்,” என்று மட்டும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.