தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுகவில் உச்ச கட்ட மோதல் தவெக ஆதரவு தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்

13 May 2026, 10:08 pm
அதிமுகவில் உச்ச கட்ட மோதல்  தவெக ஆதரவு தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்

அதிமுகவில் உச்ச கட்ட மோதல் தவெக ஆதரவு தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்

சென்னை, மே 13- தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3 ஆவது இடத்திற்கு அ.தி.மு.க தள்ளப்பட்டுள்ளதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அவர் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி, சி.சண்முகம் அணி வலியுறுத்தி வருகிறது. சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையில் 23 எம்.எல்.ஏக்கள் தனியாகச் செயல்படுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் செயல்படுகிறார்கள். பரஸ்பரம் குற்றச்சாட்டு புதன்கிழமை சட்டப்பேரவை முடிந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

தொடர் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க எடப்பாடி பழனிசாமி மறுப்பதாக எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் கூறினர்.

ஆனால் அமைச்சர் பதவியை பெறுவதற்காக கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டு தவெகவுடன் கூட்டு சேரத் துடிப்பதாக எடப்பாடி பழனிசாமி எதிர்தரப்பு மீது குற்றம்சாட்டினார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி. சண்முகம் இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்று அந்த அணியை அங்கீகரிக்கும் வகையில் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார் என்றும் எடப்பாடி கூறினார். இந்நிலையில் வியாழனன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் போது, த.வெ.க-வுக்கு எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் அணியினர் ஆதரவாக வாக்களித்தனர்.

பதவி பறிப்பு இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கட்சிப் பொறுப்புகளை பறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நத்தம் விஸ்வநாதன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் உள்ள சி.வி.சண்முகம், காமராஜ், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், இசக்கி சுப்பையா ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.

இவர்களுடன் சேர்த்து திருச்சி, கரூர், ஈரோடு,கடலூர்,ராணிப்பேட்டை, திருப்பூர், நீலகிரி, திருச்சி மாநகர், புறநகர், தஞ்சாவூர் மேற்கு, மத்திய மாவட்டச் செயலாளர்களும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.