தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுக பொதுக்குழு விவகாரம் வழக்கைத் திரும்பப் பெற ஜே.சி.டி. பிரபாகருக்கு அனுமதி

5 Jun 2026, 1:01 am
அதிமுக பொதுக்குழு விவகாரம்  வழக்கைத் திரும்பப் பெற  ஜே.சி.டி. பிரபாகருக்கு அனுமதி
<p><strong>அதிமுக பொதுக்குழு விவகாரம் வழக்கைத் திரும்பப் பெற ஜே.சி.டி. பிரபாகருக்கு அனுமதி</strong></p><p>சென்னை, ஜூன் 4 - அதிமுகவில் இருந்து, தாம் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதிமுகவிலிருந்து நீக்கிய தீர்மானத்திற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தற்போது, ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் திமுகவிலும், ஜே.சி.டி. பிரபாகர் தவெகவிலும் இணைந்துள்ள நிலையில், இந்த உரிமையியல் வழக்குகளைத் திரும்பப்பெற அனுமதிக் கோரி ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவர் தரப்பிலும் உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு கடிதங்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், முன்பு தொடரப்பட்டிருந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு வியாழக்கிழமை (ஜூன் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பான கடிதங்கள் நீதிபதி முன்பு சமர்பிக்கப்பட்டன. அதை ஏற்ற நீதிபதி, அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டார். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.