தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது! திருச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!

2 Apr 2026, 5:30 am

திருச்சிராப்பள்ளி, ஏப். 1 - 'ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் மீண்டும் என்.டி.ஏ. ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டின் பெயரையே 'தட்சிண பிரதேஷ்' என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்' என்றும், 'இந்த ஆபத்தைத் தடுக்க ஒட்டுமொத்தத் தமிழரும் பாதுகா - அதிமுக கூட்டணிக்கு எதிராக, ஓரணியில் இணைய வேண்டும்' என தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், அதிமுக-வின் துரோகத்தையும் பாஜக-வின் தமிழக எதிர்ப்பு அரசியலையும் கடுமையாகச் சாடினார்.

அதிமுகவை அடிமைக் கூட்டமாக்கிய பழனிசாமி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடிய முதலமைச்சர், தன்னுடைய பதவி சுகத்தையும் பாதுகாப்பையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறார். மக்கள் நலனை விட தனது சுயநலமே அவருக்கு முக்கியம் என்று குற்றம் சாட்டினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.