அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு எதிரான கூட்டணி: கனிமொழி எச்சரிக்கை
9 Apr 2026, 5:30 am

அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு எதிரான கூட்டணி: கனிமொழி எச்சரிக்கை

சென்னை, ஏப். 8 - அதிமுக- பாஜக கூட்டணி திமுகவுக்கு எதிரான கூட்டணி இல்லை, தமிழ்நாட்டிற்கே எதிரான கூட்டணி என்று திமுக துணைப் பொதுச் செயலாளர், கனிமொழி எம்.பி. தெரிவித்தார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எஸ்.சுந்தர்ராஜை ஆதரித்து அவர் பேசினார்.

வாக்குறுதியை நிறைவேற்றிய அரசு கலைஞர் ஒரு தேர்தலில் இலவச தொலைக்காட்சி பெட்டி தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றிக் காட்டினார். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கி வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியைத் தர மறுக்கிறது. நீட் தேர்வில் படித்தால்தான் நிதி கொடுப்போம் எனக் கூறி 3,500 கோடி ரூபாயை கொடுக்கவில்லை. மக்கள் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது என்று கனிமொழி குற்றம் சாட்டினார்.