பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு
22 Feb 2026, 3:26 pm
<p><strong>பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு </strong></p>
<p>சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் தனித் தேர்வாளர்களுக்கான அனுமதிச் சீட்டு பிப்ரவரி 23 அன்று பிற்பகலில் வெளியிடப் படவுள்ளதாக தேர்வுத் துறை இயக்குநர் கே. சசிகலா அறி வித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் 26 வரையும், பிளஸ் 1 (அரியர்) தேர்வு மார்ச் 2 முதல் 27 வரையும் நடைபெற வுள்ளன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இரு தேர்வுகளுக்கும் ஒரே அனுமதிச் சீட்டு மட்டுமே வழங்கப்படும். தனித் தேர்வர் கள் www.dge.tn.gov.in என்ற வலைதளத்தில் அனு மதிச் சீட்டை பதிவிறக்கிக் கொள்ளலாம். பள்ளி மாணவர் களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அடுத்த வாரம் அவரவர் பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.</p>
