செயலற்ற பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம்
26 Dec 2025, 4:32 pm
<p><strong>செயலற்ற பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம்</strong></p>
<p>தருமபுரி, டிச.26- பாலக்கோடு கூட்டுறவு சர்க் கரை ஆலையின் கரும்பு தலைமை அலுவலரின் செயலற்ற நடவடிக் கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் தினசரி 2000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். செயலற்ற நிர்வாக செயலாட்சியர், கரும்பு தலைமை அலுவலர் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும். 30 ஆண்டுகளாக பணிபுரியும் கரும்பு அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். காலிப்பணியி டங்களை உடனடியாக நிரந்தரப் பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். சிஎல்ஆர் தொழிலாளர் கள் ஓய்வு பெறும்போது, பணிக் கொடை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் வெள்ளியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் பி.முருகன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சி.நாகராசன், வட்டச் செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சி.கலாவதி, வட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.சேகர், என்.வரதராஜன், ஜி.பாண்டியம்மாள், உதயகுமார், வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் பி.கோவிந்தசாமி, விவசாயிகள் சங்க வட்டத் தலை வர் ஜி.நக்கீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
