செயற்கையான குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கும் நிர்வாகம்
1 Feb 2026, 3:51 pm
<p><strong>செயற்கையான குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கும் நிர்வாகம்</strong></p>
<p>உடுமலை, பிப்.1- அணையில் நீர் இருந்தும், குடி நீர் விநியோகம் செய்யாமல் செயற் கையான குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கும் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து போராட் டத்தில் ஈடுபடவுள்ளதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித் துள்ளது. திருப்பூர் மாவட்டம், குடிமங் கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், பொது மக்க ளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. உடுமலை நக ராட்சி, குடிமங்கலம் ஒன்றியம், உடு மலை ஒன்றியம், மடத்துக்குளம் ஒன்றியம் மற்றும் ஐந்து பேரூ ராட்சி பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் சுமார் 44 மில்லின் லிட்டர் தின மும் (MLD) தண்ணீர் எடுக்கப்படுகி றது. மேலும், திருமூர்த்தி அணை யிலும் போதிய தண்ணீர் இருப்பும் உள்ள நிலையில் குடிநீர் விநி யோகத்தை முறைப்படுத்தினால் மட்டுமே அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும். ஆனால், குடிமங்கலம் ஒன்றியத்தில் பல பகுதிகளில் வாரம் ஒரு முறை கூட தண்ணீர் வரு வதில்லை. இதனால் குடிநீர் கிடைக் காமல், பல கிலோ மீட்டர் தொலை வில் இருக்கும் கூட்டுக்குடிநீர் சேமிப்பு நிலை தொட்டிகளுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், குடி மங்கலம் ஒன்றியத்தின் கடைசி ஊராட்சிகளில் குடிநீர் மாதம் ஒரு முறை கூட வருவதில்லை. விருகல் பட்டி, சோமாரபட்டி, பூளவாடி, புதுப்பாளையம், பெரியபட்டி மற் றும் பண்ணைகிணறு ஆகிய ஊராட்சிகள், ஒன்றியத்தின் எல்லைப்பகுதியில் உள்ளதால் கூட்டுக்குடிநீர் முறையாக வருவ தில்லை. இதனால் இப்பகுதி மக் கள் கடுமையான பாதிப்புக்குள் ளாகி வருகின்றனர். முறையாக குடி நீர் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் ஊராட்சிகளில் நடைபெற்ற நடந்த கிராம சபை கூட்டத்தில் முறையிடப்பட்டது. மேலும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூட்டு குடிநீர் திட்ட துணை பொறியா ளரிடம் முறையிடப்பட்டது. மேலும், ஒரு வார காலத்திற்குள் தீர்வு காண படாவிட்டால், மக்களை திரட்டி குடி மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.</p>
