தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்
தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 Mar 2026, 4:52 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
பேரவை கூட்டத்தொடர் முடித்து வைப்பு
சிவந்தி ஆதித்தன் துணைவியார் மறைவு: முதல்வர் இரங்கல்
சென்னை: தினத்தந்தி நிறுவனத்தின் முன்னாள் அதி பரும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரு மான சிவந்தி ஆதித்தன் துணைவியார் மாலதி மறைவுக்கு  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில், “தினத்தந்தி நிறுவனத்தின் முன்னாள் அதிபர் சிவந்தி ஆதித்தன் துணைவியார் மாலதி மார்ச் 12 ஆம் தேதி இரவு மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினேன். மேலும், மாலதி மறைவால் துயரத்தில் உள்ள தினத்தந்தி குழுமத்  தலைவர் சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட குடும்பத்தினருக் கும், உறவினர்களுக்கும் தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாலதியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட  பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் இரங்கல்  தெரிவித்துள்ளனர்.
வெளியுறவுக் கொள்கை  ஒரு தலைப்பட்சமாக மாறுகிறது  ப.சிதம்பரம் விமர்சனம்
சென்னை: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒரு  தலைப்பட்சமான திசையில் மாறி வருகிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஐக்கிய நாடுகள் சபையின் பாது காப்பு கவுன்சிலில், ஈரான் நாட்டை கண்டனம் செய்யும் தீர்மா னத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது வெளியுறவுக் கொள்கை எவ்வாறு ஒருதலைப்பட்சமாக மாறி வருகிறது என்பதற்கான இன்னொரு சான்று. அதே நேரத்தில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் 1,300  பேர் உயிரிழந்ததையும், அதில் 168 குழந்தைகள் மரணித்த தையும் இந்தியா கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.  அந்த தீர்மானம் அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாகவும், ரஷ்யா மற்றும் சீனா  அந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. “எது விவேகம்? எது  ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை?” என அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடைத்தாளை ஆர்டிஐ மூலம் பெறலாம்! மாநில தகவல் ஆணையம் உத்தரவு
சென்னை: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு களில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டுப் பெறலாம் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்  தேர்வில் தாம் எழுதிய விடைத்தாள்களின் நகலை வழங்குமாறு ஒரு மாணவி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அரசு தேர்வுகள் இயக்ககம், தேர்வு முடிந்த ஐந்து  நாட்களுக்குள் மட்டுமே விடைத்தாள் பெற விண்ணப்பிக்க  அவகாசம் உள்ளதாகக் கூறி அந்த மனுவை நிராகரித்தது. இதையடுத்து மாணவி மாநில தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த தகவல் ஆணையர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மாண வர்கள் விடைத்தாள்களைப் பெற உரிமை உள்ளதாகத் தெரி வித்தார். அதன்படி, பக்கத்திற்கு ரூ.2 கட்டணம் செலுத்தி விடைத்தாள்களின் நகலைப் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.
சிபிஐ விசாரணை: தில்லி செல்லும் விஜய் '
சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன்  அனுப்பியிருந்தது. அதன்படி அவர் ஏற்கனவே இரண்டு  முறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகள் காரணமாக 15 நாட்கள் அவகாசம் வழங்குமாறு விஜய் சிபிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி தருமாறும் கேட்டிருந்தார். ஆனால் மார்ச் 15 ஆம் தேதி தில்லியில் நேரில் ஆஜராகு மாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்காக விஜய் தனி  விமானத்தில் தில்லி செல்ல உள்ளார்.
மின்சார  அடுப்புகளின்  விற்பனை அதிகரிப்பு
கன்னியாகுமரி: சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கன்னியா குமரி மாவட்டம் நாகர் கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சார அடுப்புகளின் விற்பனை அதிகரித்து உள்ளது. நாளொன் றுக்கு சராசரியாக 40 மின்சார அடுப்புகள் வரை விற்பனையாகி வருவதாக விற்பனை யாளர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த  நாட்களை ஒப்பிடும் போது விற்பனை சுமார்  மூன்று மடங்கு உயர்ந்து உள்ளதாகவும் கூறப்படு கிறது.
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
சென்னை: நாம் தமி ழர் கட்சியின் முன்னாள்  நிர்வாகியும், கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி யிட்டவருமான காளி யம்மாள், சென்னையில் அதிமுக பொதுச் செய லாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து  அதிமுக-வில் இணைந் தார்.
சசிகலா கட்சிக்கு பெயர் அறிவிப்பு
சென்னை: சமீபத் தில் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய வி.கே. சசிகலா, தனது  கட்சிக்கு “அனைத்திந் திய புரட்சித் தலைவர்  மக்கள் முன்னேற்றக் கழ கம்” (எஐபிஎம்கே) என்று பெயரிட்டுள்ள தாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், “தென்னை மரம்” சின்னத்தில் இந்தாண்டு நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மிரட்டிப் பார்க்கும் சிபிஐ
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை திமுக  மிரட்டியதாக கூறப்படு வது அப்பட்டமான குற்றச்சாட்டு என்று கூறிய  அமைச்சர் ரகுபதி, கரூர் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வி.  செந்தில்பாலாஜி எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவருக்கு மத்திய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பி மிரட்டிப் பார்க் கிறது. ஆனால் திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரி வித்தார்.
Share
FacebookXWhatsAppTelegram
பரிந்துரைகள்
பரிந்துரைகள் இல்லை.
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.