வன உரிமை, பெசா சட்டங்கள் மீறப்படுகிறது! ஒன்றிய அமைச்சரிடம் ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்ச் மனு
17 May 2026, 9:43 pm

வன உரிமை, பெசா சட்டங்கள் மீறப்படுகிறது! ஒன்றிய அமைச்சரிடம் ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்ச் மனு

புதுதில்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் பிருந்தா காரத், ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய மஞ்ச் தலைவர் ஜிதேந்திர சௌத்ரி (திரி புரா எதிர்க்கட்சித் தலைவர்) ஆகி யோர் தலைமையிலான பிரதிநிதி கள் குழு, ஒன்றிய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஜுயல் ஓரமை நேரில் சந்தித்து, 13 மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினரின் முக்கியப் பிரச்ச னைகளை முன்னிலைப்படுத்தி மனுக்களை சமர்ப்பித்தது.

வன உரிமைச் சட்டம் மற்றும் பெசா (PESA) சட்டம் மீறப்படுவது, கிராம சபைகளின் உரிமைகள் மறுக்கப்படுவது, பழங்குடியின மாணவர் விடுதிகளின் அவல நிலை, இடஒதுக்கீடு சார்ந்த சிக்கல் கள் மற்றும் பழங்குடியின சமூ கங்களைப் பாதிக்கும் வகையில் பெருமளவில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆகியவை குறித்த தங்களின் கவலைகளை அமைச்சரி டம் எடுத்துரைத்தனர்.

பிரதிநிதிகள் குழுவினர் எழுப்பிய பிரச்சனைகள் குறித்து பழங்குடியினர் விவகார அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், சமர்ப்பிக்கப் பட்ட மனுக்களுக்குப் பதிலளிக்கும் என்றும் அமைச்சர் ஜுயல் ஓரம் உறுதியளித்தார்.