மாணவர் சங்கம் போராட்ட அறிவிப்பு எதிரொலி விடுதியில் ஆதிதிராவிட நல அலுவலர்கள் ஆய்வு
18 Mar 2026, 3:34 pm
<p><strong>மாணவர் சங்கம் போராட்ட அறிவிப்பு எதிரொலி விடுதியில் ஆதிதிராவிட நல அலுவலர்கள் ஆய்வு</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 18- லத்துவாடியில் உள்ள அரசு சமூக நீதி மாணவர் நல விடுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு இந்திய மாணவர் சங்கம் போராட்டம் அறிவித்த நிலை யில், உடனடியாக ஆதிதிராவிட நல அலுவலர்கள் விடுதியில் ஆய்வு மேற் கொண்டனர். நாமக்கல் மாவட்டம், லத்துவாடி யில் உள்ள அரசு சமூக நீதி மாணவர் நல விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதி யில் கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக் குறிச்சி, சேலம், தேனி, திருச்சி உள் ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர் கள் தங்கி பயின்று வருகின்ற னர். இந்நிலையில் இந்த விடுதியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை, விடுதிக்காப்பாளர் விடுதிக்கு வருவதில்லை, அரசு கொடுக்கக்கூடிய சலுகைகள் எதுவும் மாணவர்களுக்கு கொடுப்பதில்லை, குடிநீர் சரியாக வருவதில்லை, விடுதி காப்பாளர் மாணவர்களை ஒருமையில் பேசுகிறார் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் கடந்த செவ்வாயன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆதிதிராவிட நல அலுவலர், மாணவர் சங்க நிர்வாகி களை நேரில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அதி காரிகள் “நாங்கள் விரைவில் நேரில் ஆய்வு செய்து அனைத்து கோரிக்கை களும் உடனடியாக சரி செய்வதற்கு நட வடிக்கை எடுக்கிறோம். விடுதி காப்பா ளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த அடிப்படையில், புதனன்று விடுதி யில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்திய மாணவர் சங்கம் வைத்த கோரிக்கை கள் ஒரு சிலவற்றை விடுதியில் அதிகாரி கள் நிறைவேற்றினர். இதனால் நாமக்கல் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அறி விக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது மாணவர் சங்க மாவட்டத் தலைவர் நிசார், செயலாளர் தங்கராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கன்னிகா மற் றும் விடுதி மாணவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
