தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாரங்காடவு பாலம் விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்

10 Jan 2026, 2:48 pm
நாரங்காடவு பாலம் விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்
<p><strong>நாரங்காடவு பாலம் விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்</strong></p> <p>நீலகிரி மாவட்டம் நெல்லியா ளம் நகராட்சிக்குட்பட்ட புளியம் பாறை கிராம மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான நாரங் காடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் விவகாரத்தில், வனத் துறையின் மெத்தனப் போக்கி னால் பழங்குடியின மக்கள் பெரும் அநீதிக்குள்ளாகியுள்ளனர். இது &nbsp;தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நல &nbsp;மாநில ஆணையம் தற்போது விசாரணையைத் தொடங்கி யுள்ளது. முதல்வரின் வாக்குறுதியும் நிதி ஒதுக்கீடும் புளியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் குக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இங்கு &nbsp;பனியர் மற் றும் காட்டுநாயக்கர் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழ் கின்றனர். &nbsp;மழைக் காலங்களில் நாரங்காடவு ஆற்றில் ஏற்படும் &nbsp;வெள்ளப்பெருக்கால் உயிரிழப்பு கள் தொடர்கதையாகி வந்தன. 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாணவி தமிழரசி வைத்த &nbsp;கோரிக்கையை ஏற்று, &ldquo;ஆட்சி அமைந்த 100 நாட்களில் பாலம் &nbsp;கட்டப்படும்&rdquo; எனத் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிய ளித்தார். வாக்குறுதியை நிறை வேற்றும் விதமாக, எஸ்.ஏ.டி.பி &nbsp;(SADP) திட்டத்தின் கீழ் ரு.30 லட்சம் &nbsp;நிதி ஒதுக்கப்பட்டு, நெல்லியாளம் நகராட்சி மூலம் கான்கிரீட் பாலம் &nbsp;கட்டப் பணிகள் தொடங்கப்பட் டன. வனத்துறையின் முரண்பட்ட நிலைப்பாடு மக்கள் பயன்பாட்டிற்கான கான்கிரீட் பாலம் அமையவிருந்த இடம் வனத்துறைக்குச் சொந்த மானது எனக் கூறி வனத்துறை முட்டுக்கட்டை போட்டது. இதனை யடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தை முன்னெ டுத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்கள் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு முறையிட்ட பொழுது வனத்துறையானது &ldquo;இங்கு பழங் குடிகளே இல்லை&rdquo; எனவும், &ldquo;பாலம் கட்டினால் கடத்தல் சம் பவங்கள் நடக்கும்&rdquo; எனவும் கூறி யது பொதுமக்களிடையே கொந்த ளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, எஸ் ஏ டிபி மூலமாக &nbsp;ஒதுக்கப்பட்ட 30 லட்ச ரூபாய் நிதி யிலிருந்து &nbsp;ரூ.18 லட்சத்தைப் பெற் றுக்கொண்ட வனத்துறை, மக்கள் கோரிய கான்கிரீட் பாலத்திற்குப் பதிலாக, ஒரு ஆம்புலன்ஸ் கூட &nbsp;செல்ல முடியாத வெறும் 4 அடி &nbsp;அகலமுள்ள இரும்பு நடை பாலத்தை காவல்துறை பாது காப்புடன் அப்பாவி பொது மக்களுக்கு எதிராக அமைத்தது. &nbsp;18 லட்சம் ரூபாய் செலவில் வெறும் &nbsp;6034 கிலோ இரும்பை மட்டுமே பயன்படுத்தி அமைக்கப்பட்ட இந்தப் பாலத்தில் பெரும் முறை கேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந் துள்ளது. ஆணையத்தின் அதிரடி விசாரணை இந்த அநீதிக்கு எதிராக மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் இராசி இரவிக்குமார் மாநில ஆதிதிராவிடர் மற்றும் &nbsp;பழங்குடியினர் நல ஆணையத்தில் &nbsp;புகார் அளித்தார். &nbsp;இதன் அடிப்படையில் கடந்த 09.01.2026 அன்று நடைபெற்ற விசா ரணையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்டின் புளியம்பாறை &nbsp;கிளை செயலாளர் சுபைர், பழங் குடியின தலைவர் கோபாலன் உள் ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு கான்கிரீட் பாலம் அமைந் தால் அந்த பகுதி மக்களுக்கு ஏற் படக்கூடிய நன்மைகளை விவ ரித்து ஆதாரப்பூர்வமான ஆவ ணங்களை சமர்ப்பித்தனர் ஆவ ணங்களை கூர்ந்து கவனித்த ஆணைய உறுப்பினர் மற்றும் &nbsp;விசாரணை அதிகாரிகள்&rdquo; பூங்காக் களில் அமைப்பதைப் போன்ற சிறிய பாலத்தை எதற்காக மக்கள் பயன்பாட்டிற்கு அமைத்தீர்கள்?&rdquo; என வனத்துறையிடம் கேள்வி &nbsp;எழுப்பியுள்ளது. மேலும், மாநில &nbsp;ஆணையம் இந்தப் பிரச்சனைக்கு சட்டரீதியான தீர்வு காண்ப தாக உறுதியளித்துள்ளது. &nbsp;இதற்கிடையில், சிபிஎம் மாநி லச் செயலாளர் பெ. சண்முகத்தி டம் இது குறித்த மனு அளிக்கப் பட்டது. முதல்வரின் வாக் குறுதியை சிதைக்கும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள் மீது &nbsp;நடவடிக்கை எடுக்கவும், ஆம்பு லன்ஸ் சென்று வரக்கூடிய வலு வான கான்கிரீட் பாலத்தை அமைக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் மருத்து வத் தேவைகளுக்கான இந்தப் பாலம், அதிகாரிகளின் மெத்தனப் போக்கிலிருந்து மீட்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - இராசி.இரவிக்குமார்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.