முந்தய பக்கம்

கம்பம், ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு கூடுதல் வாக்கு இயந்திரம் ஒதுக்கீடு

12 Apr 2026, 5:30 am
கம்பம், ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு கூடுதல் வாக்கு இயந்திரம் ஒதுக்கீடு

கம்பம், ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு கூடுதல் வாக்கு இயந்திரம் ஒதுக்கீடு

தேனி, ஏப்.11- கம்பம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச் சாவடிகளுக்கு கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டது.

ஆண்டிப்பட்டியில் 18 வேட்பாளர்களும், கம்பத்தில் 19 வேட்பாளர்களும் என 15-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதால் கூடுதல் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்படி ஆண்டிப்பட்டிக்கு 412-ம் கம்பத்துக்கு 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு வைப்பறை, அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இயந்திரங்கள் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram