பொங்கல் பண்டிகையையொட்டி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
11 Jan 2026, 7:00 am
<p>கும்பகோணம், ஜன.11- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கும்பகோணம் போக்குவரத்து துறை மக்கள் தொடர்பு அதிகாரி மூலம் மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவிக்கையில், “ஜன.9 முதல், வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 614 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 2,706 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,21,770 பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டுள்ளனர். இதுவரை சென்னையிலிருந்து 1,16,977 பேர் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை பயண காலத்தில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.</p>
