தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

25 Nov 2025, 3:29 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில்  நகைக்கு கூடுதல் கடன்

சென்னை: மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் தங்க நகை அட மானம் பேரில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், இந்த கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை 6 ஆயி ரம் ரூபாயிலிருந்து 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கத்தின் விலை பவுன் 92 ஆயிரம் ரூபாய் அளவிற்கும், கிராம் 12 ஆயிரம்  ரூபாயாகவும் உயர்ந்துள்ளதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 42  லட்சம் பேருக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைக்  கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிபிஐ முன்பு 2-ஆவது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்!

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்  தொடர்பாக தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைச்  செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதிய ழகன் ஆகியோர் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை யும் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகினர். திங்களன்று காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை சுமார் 10  மணி நேரம் தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப் பட்ட நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை யன்றும் விசாரணை தொடர்ந்தது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன  ஓட்டுனர்கள், உரிமையாளர்கள், நெரிசலில் காயமடைந்த வர்கள் மற்றும் தவெக அலுவலக உதவியாளர்களிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.

நாளை கூடுதல் பத்திரங்கள் பதிவுக்கு அரசு ஏற்பாடு

சென்னை: கார்த்திகை மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான நவம்பர் 27 அன்று அனைத்து சார்பதிவாளர் அலு வலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறைத் தலைவர் தெரிவித்து உள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு  பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதி வாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும். அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலு வலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு  வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு  வில்லைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது!

சென்னை, நவ.25- சென்னையில் ஆப ரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.200 உயர்ந்து  ஒரு கிராம் ரூ.11,720-க்கு  விற்பனையானது. பவு னுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.93,760-க்கு விற்பனை செய்யப் பட்டது. 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ. 170 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 9,780க்கும் பவுனுக்கு ரூ. 1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.78,240க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.174க்கும், ஒரு கிலோ ரூ. 1,74,000-க்கும் விற்பனை செய் யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.