தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆதனூர் – குமாரமங்கலம் தடுப்பணை பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை விவசாயிகள் அதிருப்தி!

17 May 2026, 1:57 am
ஆதனூர் – குமாரமங்கலம் தடுப்பணை பணிகள்  முடிந்து 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை  விவசாயிகள் அதிருப்தி!

ஆதனூர் – குமாரமங்கலம் தடுப்பணை பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை விவசாயிகள் அதிருப்தி!

சிதம்பரம், மே 16: காட்டுமன்னார்கோவில் அருகே ஆதனூர் – குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் பயன் பாட்டிற்கு வராததால் விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் கீழணை கடந்த 1836 -ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பருவமழைக் காலங்களில் கீழணையிலி ருந்து ஆண்டுதோறும் சுமார் 20 டி.எம்.சி. உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்ற ப்பட்டு, கடலில் வீணாகக் கலந்து வரு கிறது.

ரூ.495 கோடியில் புதிய தடுப்பணை

இந்த உபரி நீரைச் சேமித்துப் பாசனத்தி ற்குப் பயன்படுத்தும் நோக்கில், பொதுப்பணித்துறை சார்பில் கடலூர் மாவட்டம் ஆதனூர் மற்றும் தஞ்சை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை அமைக்கும் திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு 495 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது.

சுமார் 1,064.5 மீட்டர் நீளமும், 28 மீட்டர் அகலமும் கொண்ட இந்தத் தடுப்பணை யில் 12 மணல் போக்கி மதகுகள், 72 கதவணைகள் என மொத்தம் 84 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங் களில் 5 லட்சம் கனஅடி தண்ணீரை வெளி யேற்றும் திறன் கொண்ட இந்த அணையில், 0.334 டி.எம்.சி. அளவிற்கு நீரைச் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்தத் திட்டத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற் றிருந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே பணிகள் அனைத்தும் நிறை வடைந்தும், இதுவரை தடுப்பணை பயன்பாட்டிற்கு வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாமதத்திற்கான காரணம்

தடுப்பணையில் முழு கொள்ளளவில் நீர் தேக்கப்படும் போது, கொள்ளிடம் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள ஆற்றுப் படுகை புஞ்சை நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால், பாதிக்கப் படும் நிலங்களை அரசால் கையகப் படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. ஆனால், தஞ்சாவூர் மாவட்ட விவ சாயிகள் கூடுதல் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி கள் முழுமையாக நிறைவடைந்த பிறகே, தடுப்பணையைத் திறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு சட்ட மன்றத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, விவ சாயிகளின் நலன் கருதி இந்த புதிய தடுப் பணையை விரைவில் திறக்க வேண்டும் எனப் பேசினார். ஆனால், இதுகுறித்து அப் போதைய திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வீணாகிக் கொண்டிருக்கும் ஆதனூர் – குமாரமங்கலம் தடுப்பணையை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்ற, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.