தீக்கதிர் முக்கிய செய்திகள்
4 Jul 2026, 8:12 pm

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

விழிஞ்ஞம் துறைமுகமானது கேரள அரசின் விஐஎஸ்எல் - அதானியின் ஏவிஐபிபிஎல் இடையே போடப்பட்ட பொது-தனியார் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ் கட்டப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கேரள அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல், ஏவிஐபிபிஎல் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குகளை ரூ.13,000 கோடிக்கு அதானி குழுமம் கைமாற்றியுள்ளது. இது பகற்கொள்ளை அன்றி வேறொன்றுமில்லை.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி

அயோத்தி முறைகேடு யாருடைய அதிகாரத்தின் கீழ் நடந்தது? ஒன்றிய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில்,”ராமர் கோவில் அறக்கட்டளையின் எந்தவொரு முடிவுகளிலும் எங்களால் தலையிட முடியாது; அரசாங்கமோ அல்லது நீதிமன்றங்களோ இதில் தலையீடு செய்ய முடியாது’ என்று கூறியுள்ளது. அப்படியென்றால் இந்த முறைகேட்டுக்கு யார் பதில் கூறுவார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்தேவ் பகத்

அயோத்தி ராமர் கோவிலில் நன்கொடைகள் திருடப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து, ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து வந்துள்ள எதிர்வினை மிகவும் காலதாமதமானது. ஆர்எஸ்எஸ் அறிக்கை மோடி அரசாங்கத்தின் அழுத்தத்திற்குப் பணிந்து வெளியிடப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

பைசாபாத் வழக்கறிஞர்கள் சங்கம்

ஒரு இடத்தில் விரும்பத்தகாத விஷயம் நிகழ்ந்தால் பிரதமர் மோடி அங்கு செல்ல மாட்டார். மணிப்பூர் மாநிலத்திற்கு மோடி செல்லாததே இதற்கு சாட்சி. அப்படியென்றால் மோடி இனி முறைகேடு நடந்த ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டாரா?