சத்தீஸ்கர் அதானி மின் நிலையத்தில் வெடித்த ‘மௌனப் புரட்சி’ நீதிமன்றத் தடையை உடைத்தெறிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்
15 May 2026, 10:39 pm

சத்தீஸ்கர் அதானி மின் நிலையத்தில் வெடித்த ‘மௌனப் புரட்சி’ நீதிமன்றத் தடையை உடைத்தெறிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்

வேலைநிறுத்தம் 18

ராய்கர், மே 15- சத்தீஸ்கர் மாநிலத்தின் ஹஸ்தியோ (Hasdeo) காடுகள் மற்றும் ராய்கர் பகுதி களில் இன்று ஒலிக்கும் முழக்கம்: “மௌனம் என்பது எப்போதும் அமைதி அல்ல; அது புயலுக்கு முந்தைய அமைதி”. அதானி குழுமத்தின் ராய்கர் அனல் மின் நிலையத்தில் நிலவும் தொழிலாளர் கொந்தளிப்பு, வெறும் ஊதிய உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல; அது உழைக்கும் வர்க்கத்திற்கும், கார்ப்பரேட் அதிகாரத்திற்கும் இடையிலான வாழ்வாதாரப் போராக மாறியுள்ளது. இத்தொடரின் 18-ஆவது பகுதியில், 2026-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ராய்கரில் நிகழ்ந்த அந்த ‘மௌனப் புயலை’ விரிவாகக் காண்போம். ராய்கரில் உள்ள அதானி அனல் மின் நிலையம், முதலில் அவந்தா (Avantha) குழுமத்தால் தொடங்கப்பட்டது. கடன் பிரச்சனையில் சிக்கிய இந்த ஆலை யை 2019-ல் அதானி குழுமம் கையகப் படுத்தியது. தற்போது இங்குள்ள 600 மெகா வாட் அலகைத் தவிர, 1,600 மெகாவாட் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விரிவாக்கத்திற்காக ராய்கரின் இயற்கை வளங்களும், ஆதிவாசி மக்களின் நிலங்களும் சுரண்டப்படுவதுதான் தற்போதைய போராட்டங்களின் ஆணிவேர்.

வேலைவாய்ப்பு மோசடியும் ‘ஜல், ஜங்கிள், ஜமீன்’ போராட்டமும்

நிலத்தை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என்ற முந்தைய நிர்வாகத்தின் வாக்குறுதியை அதானி குழுமம் நிறைவேற்றத் தவறியது. இதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டபோது ‘ஜல், ஜங்கிள், ஜமீன்’ (நீர், காடு, நிலம்) என்ற உணர்வுப்பூர்வமான முழக்கமாக மாறியது.

• அக்டோபர் 2025-இல் தரம்ஜாய்கர் (Dharamjaigarh) பகுதி ஆதிவாசி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணி நடத்தினர்.

• டிசம்பர் 2025-இல் நிலக்கரி ஏற்றிச்செல்லும் சாலைகளை முடக்கி ஆதிவாசிப் பெண்கள் காவல் துறை யினரைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட னர். நீதிமன்றத் தடையை மீறிய

வேலைநிறுத்தம்

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் 14 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. இதில் சம வேலைக்குச் சம ஊதியம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உள் ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகிய கோரிக்கைகள் முக்கியமானவை. இந்தக்கோரிக்கை களுக்காக டிசம்பர் 8, 2025 அன்று வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது, மின்சாரம் ‘அத்தியாவசியச் சேவை’ என்று கூறி ராய்ப்பூர் தொழிலாளர் நீதி மன்றம் 6 மாதங்களுக்கு வேலைநிறுத்தத் தடை விதித்தது.

டிஜிட்டல் வழியிலான ‘சமூக ஊடக தொழிற்சங்கவாதம்’

நீதிமன்றத் தடை மற்றும் பிஎம்எஸ் சங்கத்தின் அதிகாரப்பூர்வப் புறக்கணிப்பு ஆகியவற்றைத் தாண்டி, பிப்ரவரி 12 தேசிய வேலைநிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

• வாட்ஸ்அப் மற்றும் ரீல்ஸ் (Reels) மூல மாகத் தொழிலாளர்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து கொண்டனர்.

• மார்ச் 15-17 ஆகிய தேதிகளில், மத்தி யப் பிரதேசத்தின் சிங்க்ரௌலி அதானி ஆலையில் ஒரு தொழிலாளி இறந்ததை கண்டித்து, ராய்கர் மற்றும் கோர்பா அதானி ஆலைத் தொழிலாளர்கள் ‘ஒருமைப்பாட்டு வேலைநிறுத்தத்தில்’ (Solidarity Strike) ஈடுபட்டனர்.

ஏப்ரல் 1: ராய்கரில் ‘கருப்பு தினம்’

புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்த ஏப்ரல் 1-ஆம் தேதியைத் தொழி லாளர்கள் ‘கருப்பு தினமாக’ அனுசரித்தனர்.

• காலை 6 மணி ஷிஃப்ட்டிற்கு வந்த தொழி லாளர்கள் கறுப்புப் பட்டை அணிந்து வந்து அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்தனர்.

• “மௌனம் எப்போதும் அமைதி அல்ல” என்ற கருப்பொருளில், தொழிலாளர்கள் வேலை முடிந்ததும் அமைதி ஊர்வலமாகச் சென்று ஆதிவாசி மக்களின் போராட்டக்களங்களுடன் இணைந்தனர். இது ‘தொழிலாளியும்’ ‘விவசாயியும்’ இணைந்த ஒரு அரசியல் சக்தியாக ராய்கரில் உருவெடுத்தது. ராய்கர் போராட்டங்களின் சத்தத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் கவனித்து வருகின்றனர். காடுகளையும் கனிம வளங்களையும் காக்கத் துடிக்கும் ஆதிவாசிகளும், உழைப்புச் சுரண்டலை எதிர்க்கும் தொழிலாளர்களும் ராய்கரில் கைகோர்த்துள்ளது இந்தியத் தொழிலாளர் வர்க்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம். லெப்ட் வியூஸ்