போதைப்பொருட்களை விற்கும் அதானி ஜூலை 14இல் விசாரணை
1 hour before

போதைப்பொருட்களை விற்கும் அதானி ஜூலை 14இல் விசாரணை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ளது டியூட்டி-ப்ரீ (Duty-Free) கடை. இந்தக் கடைகளை பிரதமர் மோடிக்கு நெருங்கிய தொழிலதிபரான கவுதம் அதானியின் கூட்டு நிறுவனமான ‘மும்பை டிராவல் ரீடைல்’ (Mumbai Travel Retail - துபாயின் பிளமிங்கோ நிறுவனத்துடன் இணைந்தது) நடத்தி வருகிறது. மும்பை விமான நிலையத்தில் எண்ணற்ற டியூட்டி-ப்ரீ கடைகள் உள் ளன.

இந்நிலையில், ஒன்றிய அரசால் பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்தானது எனக் கருதப்படும் ‘நிகோடின் பவுச்சு கள்’ (Nicotine Pouches) சட்டவிரோத மாக விற்பனை செய்யப்பட்டு வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ‘பகையற்ற புகைப்பழக்கத்திற்கான தாய் அமைப்பு’ அளித்த புகாரின் பேரில், இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை மும்பை விமான நிலையத்தின் சர்வதேசப் புறப்பாடு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, உரிய அனுமதியின்றி வெளிநாட்டு நிகோ டின் பவுச்சுகள் விற்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தியாவில் உரிமம் இன்றி மருந்து களை விற்றால், குறைந்தது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அப ராதம் விதிக்கப்படலாம் என்பது விதி முறையாகும். இந்தியாவில் இ-சிகரெட்டு கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நிகோடின் பவுச்சுகளுக்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் அதானி குழு மம் கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத் துள்ளது.