ரூ.17,698 கோடி மதிப்புள்ள சுரங்கப்பாதை திட்டத்தை ரூ.22,267 கோடிக்கு கேட்கும் அதானிnஒப்புதல் அளித்த கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்?
yesterday

ரூ.17,698 கோடி மதிப்புள்ள சுரங்கப்பாதை திட்டத்தை ரூ.22,267 கோடிக்கு கேட்கும் அதானிnஒப்புதல் அளித்த கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்?

பெங்களூருகர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் உள்ளார்.இந்நிலையில், அம்மாநில தலைநகர் பெங்களூருவில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கர்நாடகஅரசு வடக்கு-தெற்கு சுரங்கப்பாதை சாலைத் திட்டத்தை அறிவித்துள்ளது. சுமார் 16.75 கி.மீ நீளமுள்ள இந்த ஹெப்பால் - சில்க்போர்டு சுரங்கப்பாதை சாலை திட்டத்தை பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பரான அதானி ஏலத்தில்எடுத்துள்ளார்.

திட்டத்தின் உத்தேச செலவு ரூ.17,698 கோடியாகும். ஆனால் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.22,267 கோடிகொடுத்தால் மட்டுமே திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்போம் என கூறியது. இது உத்தேச திட்டச் செலவை விட சுமார்ரூ.4,569 கோடி அதிகமாகும்.இத்தகைய சூழலில், அதானி ஞாயிறன்று முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை அவரது இல்லத்தில்சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்துமுதலமைச்சர் அலுவலகமோ அல்லது அதானி குழுமமோ எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையையும்வெளியிடவில்லை. எனினும் அதானியின் லாப கொள்ளை வெறிக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஒப்புதல்அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதானியை விமர்சன பொருளாக...கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா (பாஜக), அதானி - டி.கே.சிவக்குமார் சந்திப்பைஒரு விமர்சன பொருளாக கையிலெடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறுகையில்,”அதானியைச் சந்திப்பதற்குமுன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அனுமதி பெற்றாரா? தில்லியில் (மத்தியில்) அதானியை காங்கிரஸ் எதிர்க்கிறது. ஆனால் பெங்களுருவில் நிலைமை வேறாக உள்ளது. இது இரட்டை வேடம் இல்லையா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.