தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுற்றுச்சூழலை பலிகொடுத்து அதானியின் நீர்மின் திட்டமா?

10 Jul 2026, 8:10 pm
சுற்றுச்சூழலை பலிகொடுத்து அதானியின் நீர்மின் திட்டமா?

சுற்றுச்சூழலை பலிகொடுத்து அதானியின் நீர்மின் திட்டமா?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா விற்கு உட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டுப் பகு தியில் அதானி குழுமம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1800 மெகா வாட் திறன் கொண்ட இந்தத் திட்டம், சுற்றுச் சூழல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சூழலியல் நிபுணர்களும் ஆர்வலர்களும் கூறு கிறார்கள்.

கிழக்கு தொடர்ச்சி மலையில் மொத்தம் 337.452 ஹெக்டேர் நிலப்பரப்பில், 228.352 ஹெக்டேர் காப்புக்காடு அழிக்கப்பட உள்ளது. இது சாதாரண காடு அல்ல; அழியும் நிலையில் உள்ள பல அரிய உயிரினங்களின் வாழ்விடம். மலபார் சாம்பல் இருவாச்சி, இந்திய தேவாங்கு, சிறுத்தை, கரடிகள் மற்றும் ஜவ்வாது இலைச் சருகு அரணை போன்ற தனித்துவமான உயிரி னங்கள் இங்கு வாழ்கின்றன. மேலும், இப்பகுதி ஜவ்வாது மற்றும் அமிர்தி காடுகளின் சுற்றுச் சூழல் வழித்தடத்துடன் இணைந்துள்ளது. இக்காடுகளை அழிப்பது, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு, இப்பகு தியின் வெப்பநிலையை உயர்த்தி பெரும் சூழலி யல் சமநிலையின்மையைத் தோற்றுவிக்கும். மேலும், மலைக்கிராம மக்களின் நிலங்கள் பறி போவதுடன், விவசாயம் மற்றும் குடிநீர் ஆதா ரங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இயற்கைச் சூழலும், மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலு மாக சீர்குலைக்கப்படும்.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், இத் திட்டத்தின் மின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டிற்கு ரூ. 9.10 ஆகும். அதே சமயம், சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் மூலம் வெறும் ரூ. 3 முதல் ரூ. 4-க்குள் மின்சாரத்தைப் பெற முடியும். ஏற்கெனவே கடும் கடன் சுமை யில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இந்த விலையுயர்ந்த திட்டம் கூடுதல் நிதி நெருக்கடியையே ஏற் படுத்தும். பேட்டரி சேமிப்புத் தொழில்நுட்பங்கள் போன்ற மாற்று வழிகள் மலிவாகவும், சுற்றுச்சூழ லுக்கு பாதிப்பின்றியும் இருக்கும் நிலையில், இவ்வளவு பெரிய காட்டை அழித்து இந்தத் திட் டத்தைச் செயல்படுத்த முனைவதன் அவசியம் என்ன?

பாலாற்றில் 365 நாட்களில் 65 நாட்கள் கூட தண்ணீர் வராத சூழலில், அங்கு நீர் எடுத்து வந்து மின் நிலையம் அமைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது. மேலும், ஒரு கார்ப்பரேட் நிறு வனத்தின் மீதான ஊழல் புகார்கள் உலக அள வில் விவாதிக்கப்படும் நிலையில், அந்த நிறுவ னத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வதே அரசின் அறம் சார்ந்த கடமையாகும்.

சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைத் தடுத்து, தமிழக அரசு வனத்துறை அனுமதியை மறுக்க வேண்டும். வளங்குன்றா வளர்ச்சி என்பது காடு களை அழிப்பதில் இல்லை, இயற்கையோடு இயைந்த மாற்றுத் தொழில்நுட்பங்களில் உள்ளது. எனவே, தமிழக அரசு இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.