பாஜக ஆளும் மேற்கு வங்க மாநில மருத்துவத்துறை அதானி கட்டுப்பாட்டில் செல்கிறதா?
5 Jul 2026, 9:04 pm

பாஜக ஆளும் மேற்கு வங்க மாநில மருத்துவத்துறை அதானி கட்டுப்பாட்டில் செல்கிறதா?

கொல்கத்தா மேற்கு வங்க மாநி லத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக அங்கு முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியில் இருந்து பாஜக விற்கு தாவிய சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பொறுப்பேற் றுள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங் கத்தில் பாஜக ஆட்சியை கைப் பற்றி 2 மாதம் கூட ஆகாத சூழலில், அம்மாநில மருத்துவத் துறையை பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பரான அதானி கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல அனைத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடக்க வேலையாக கொல்கத்தா நியூ டவுனில் அதானி குழுமம் சார்பில் 2,000 படுக்கை வசதிகள் கொண்ட அதி நவீன மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி வெளிப்படையாக தெரி வித்துள்ளார். இந்த மருத்துவ மனையில் ஏழை எளிய மக்களின் மருத்துவ நலனைக் கருத்தில் கொண்டு 1,000 படுக்கைகள் முற்றிலும் இலவச சிகிச்சைக்காக ஒதுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனைகளின் முக்கிய ஒப்பந் தங்களை கைப்பற்றவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் பிர ம்மாண்ட மருத்துவமனைகளை கட்ட அதானி திட்டமிட்டுள்ள தாகவும், இதன் தொடக்க பணி யாக கொல்கத்தா நியூ டவுனில் அதிநவீன மருத்துவமனை அமைக்கப்படுவதாகவும் செய்தி கள் வெளியாகியுள்ளன. ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவது அதிகா ரத்திற்கு என்று கருதினாலும், அதானிக்கும் என்று புதிய வாக்கி யத்தை சேர்த்துக் கொள்ளும் சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.