‘புலிகளின்’ பணத்தைச் சுருட்ட திட்டத்தின் மதிப்பையே ‘சுருக்கிய’ அதானி! - ராஜூபாய்
yesterday

‘புலிகளின்’ பணத்தைச் சுருட்ட திட்டத்தின் மதிப்பையே ‘சுருக்கிய’ அதானி! - ராஜூபாய்

இது கணக்குப் பிழை அல்ல. தட்டச்சுத் தவறும் அல்ல. இது அப்பட்டமான, திட்டமிட்ட மிகப் பெரும் ஊழல்.

புலிகள் காப்பகத்துக்குச் சேர வேண்டிய ரூ.227 கோடியை தரக் கூடாது என்பதற்காகவே, தனது திட்டத்தின் மதிப்பையே நூற்றில் ஒரு பங்காகக் குறைத்துக் காட்டியிருக்கிறது அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம். அந்த அப்பட்டமான பொய்யை, ஒரு கேள்விகூடக் கேட்காமல் ஏற்று முத்திரை குத்தியிருக்கிறது மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசின் வனத்துறை.

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் அதானி கிரீன் நிறுவனம் அமைத்து வரும் 1,500 மெகாவாட் தாராலி நீரேற்று மின் திட்டத்தின் மதிப்பு ரூ.5,675 கோடி. இதை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமே தனது அதிகாரப்பூர்வக் கடிதத்தில் பதிவு செய்திருக்கிறது. ஆனால், வனவிலங்குப் பாதுகாப்புக்குப் பணம் கட்ட வேண்டிய நேரம் வந்ததும், அதே திட்டம் ‘ரூ.56.75 கோடிதான்’ என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறது அதானி நிறுவனம். 99 சதவீதக் குறைப்பு! ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆவணங்களுடன் அம்பலப்படுத்தியுள்ள இந்த மோசடி, அதானிக்காக ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் எந்த எல்லை வரையும் வளைந்து கொடுக்கும் என்பதற்கான முதன்மையான சான்று.

அனுமதிக்கு ஒரு மதிப்பு, பணம் கட்ட ஒரு மதிப்பு

நிவாடே, தொண்டோஷி, கலம்பே, ஜாலு ஆகிய கிராமங்களில் 150.74 ஹெக்டேர் பரப்பில், தலா 300 மெகாவாட் கொண்ட ஐந்து அலகுகளுடன் இத்திட்டம் அமைகிறது. பகலில் மிகுதியான சூரிய மின்சாரத்தைக் கொண்டு நீரை மேல் நீர்த்தேக்கத்துக்கு ஏற்றி, இரவில் அதைக் கீழே விட்டு மின்சாரம் தயாரிக்கும் ‘நீர் மின்கலம்’ இது. அணை, சுரங்க நீர்வழிப் பாதைகள், நிலத்தடி மின் நிலையம், ராட்சத டர்பைன்கள் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விழுங்கும் கட்டமைப்பு.

இத்திட்டத்தின் விரிவான அறிக்கைக்கு மத்திய மின்சார ஆணையம் 2026 ஜனவரி 15 அன்று ஒப்புதல் அளித்துவிட்டது. பம்ப்-டர்பைன்கள், ஜெனரேட்டர்களுக்கான ஆர்டரை ஆஸ்திரியாவைத் தலைமையிட மாகக் கொண்ட பன்னாட்டு நீர்மின் உபகரண நிறுவனமான ஆண்ட்ரிட்ஸ் (ANDRITZ) 2025 ஜூனிலேயே பெற்றுவிட்டது. அனுமதி வாங்கும்போது ரூ.5,675 கோடி; பன்னாட்டு நிறுவனத்திடம் உபகரணங்களுக்கு ஒப்பந்தம்; ஆனால் புலிகள் சரணாலயத்திற்கு பணம் கட்டும் இடத்தில் மட்டும் ‘எங்கள் திட்டமே ரூ.56.75 கோடிதான்’! இதைவிட வெளிப்படையான ஏமாற்று வேறென்ன இருக்க முடியும்?

பணம் கேட்ட பிறகு தான் ‘ஞானோதயம்’

பகத்தின் அங்கமான கொய்னா வனவிலங்குச் சரணாலயத்தின் ‘சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்’ அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், 2026 பிப்ரவரி 23 அன்று கூடிய மாநில வனவிலங்கு வாரியம், இத்தகைய பகுதிகளில் அமையும் திட்டங்கள்தமது மதிப்பில் 4 சதவீதத்தைச் சரணாலயப் பாதுகாப்புக்குச் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதன்படி, 2026 மார்ச்சில் மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு) எம்.சீனிவாச ரெட்டியின் அலுவலகம், அத்திட்டத்தின் மொத்த மதிப்பில்4 சதவீதமான ரூ.227 கோடியைச் செலுத்துமாறு அதானி நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியது.

இங்குதான் ‘மாயாஜாலம்’ தொடங்கு கிறது. ரூ.227 கோடி கேட்டுக் கடிதம் வந்த பிறகு 2026 செப்டம்பர் 8 அன்று அதானி நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் நரேஷ் டெல்கு, நோட்டரி சான்றளித்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறார். பழைய மதிப்பீடு ‘ஒப்புமைமதிப்பீட்டு’ (analogous estimation) முறையில் தோராய மாகப் போடப்பட்டது; புதிய மதிப்பான ரூ.56.75 கோடியை ஏற்கவேண்டும் என்கிறது அந்தப் பத்திரம். எந்தப் பொறியியல் ஆய்வறிக்கையும் இல்லை; எந்தச் செலவுப் பட்டியலும் இல்லை.அக்டோபர் 12 அன்று, ரெட்டியின் அலுவலகம் அந்தப் பொய்யை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. முதல்தவணையாக 1 சதவீதம் கேட்கிறது. அதானி நிறுவனம் ரூ.56.75 லட்சத்தைப் புலிகள் காப்பகக் கணக்கில்செலுத்துகிறது; இதைக் காப்பகக் கள இயக்குநர் துஷார் சவான் உறுதிப்படுத்தி யுள்ளார். பழைய கணக்குப்படி முதல் தவணையே ரூ.56.75 கோடி. அதாவது, புலிகளுக்கான முதல் தவணைத் தொகையையே ‘முழுத் திட்டத்தின் மதிப்பே இதுதான்’ என்று காட்டி, மக்களின்கண்ணில் மண்ணைத் தூவியிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய குறைப்பை எப்படி ஏற்றீர்கள் என்று கேட்டதற்கு, ‘ஏன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது என்று நிறுவனத்திடமே கேளுங்கள்’ என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் ரெட்டி. பொய்யை ஏற்றுக்கொண்டஅதிகாரியே, அதற்கு விளக்கம் சொல்ல மறுக்கிறார்!

ஒரு சிறிய காரின் விலையில் ஒரு மெகாவாட் நீர்மின் நிலையமாம்!

விவரம் முந்தைய மதிப்பீடு திருத்தப்பட்ட மதிப்பீடு

திட்ட மதிப்பு ரூ.5,675 கோடி ரூ.56.75 கோடி

1 மெகாவாட்டுக்குச் செலவு ரூ.3.78கோடி ரூ.3.78 லட்சம்

4% வனவிலங்குப் பாதுகாப்பு நிதி ரூ.227 கோடி ரூ.2.27 கோடி

முதல் தவணை (1%) ரூ.56.75 கோடி ரூ.56.75 லட்சம்

புலிகள் காப்பகத்துக்கு இழப்பு — சுமார் ரூ.224.73 கோடி

அதானியின் புதிய கணக்குப்படி, ஒரு மெகாவாட் நீரேற்று மின் நிலையம் கட்ட வெறும் ரூ.3.78 லட்சம் போதும் — ஒரு சிறிய காரின் விலையைவிடக் குறைவு! மத்திய மின்சார ஆணையத்தின் கணக்கீட்டின்படி, நீரேற்றுத் திட்டங்களுக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.8 கோடி வரை செல வாகும். அதே மகாராஷ்டிரத்தில், அதே 1,500 மெகாவாட் திறனில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் அமைக்கும் பாவலி திட்டத்தின் மதிப்பு ரூ.5,723.30 கோடியிலிருந்து ரூ.9,058.09 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், அதே 1,500 மெகாவாட் திறனில் அமராவதி மாவட்டம் சிக்கல்தராவில் திட்டம் அமைக்க, அதானி குழும நிறுவனமே 2025 ஜூலையில் மாநில அரசுடன் ரூ.8,250 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சிக்கல்தராவில் ரூ.8,250 கோடி ஆகும் அதே அளவுத் திட்டம், சதாராவில் மட்டும் ரூ.56.75 கோடியில் முடிந்துவிடுமா? அதானியின் சொந்த ஆவணங்களே அதானியின் பொய்யை அம்பலப்படுத்துகின்றன.

அதானிக்காக வளைக்கப்பட்ட விதிகள் — நீளும் பட்டியல்

தாராலி தனித்த நிகழ்வு அல்ல. கடந்த பத்தாண்டுகளில், அதானிக்காக ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் சட்டங்களையும், கொள்கைகளையும், பாதுகாப்பு விதிகளை யும்கூட வளைத்த சம்பவங்களின் நீண்ட சங்கிலியில் இது மற்றொரு கண்ணி:

1. தேசப் பாதுகாப்பையே பணயம் வைத்த கவ்டா : பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கி.மீ.க்குள் பெரிய கட்டுமானங்கள் கூடாது என்ற நீண்டகாலப் பாதுகாப்பு விதியை, குஜராத் பாஜக அரசின் நெருக்குதலால்பாதுகாப்பு அமைச்சகம் தளர்த்தியது. அதன் பிறகு, எல்லையிலிருந்து வெறும் 1 கி.மீ. தொலைவில், 445 சதுர கி.மீ. நிலம்அதானியின் சூரிய-காற்றாலைப் பூங்காவுக்குக் கைமாறியது. அப்பகுதி ராணுவஅதிகாரிகளிடம்கூடக் கலந்தாலோசிக்கப்பட வில்லை என பிரிட்டனின் ‘தி கார்டியன்’ நாளிதழ்அம்பலப்படுத்தியது.

2. கோட்டா மின் நிலையம் : மாநிலத்தில் அமையும் அனல் மின் நிலையங்கள் 25% மின்சாரத்தை மாநிலத்துக்குத்தர வேண்டும் என்ற ஜார்க்கண்ட் எரிசக்திக் கொள்கையை, அம்மாநில பாஜக அரசு 2016 அக்டோபரில் அதானிநிறுவனம் முன்மொழிந்தபடியே திருத்தியது. 2019-இல் ஒன்றிய வர்த்தக அமைச்சகம் சிறப்புப் பொருளாதாரமண்டல விதிகளை மாற்றி, நாட்டிலேயே முதன்முறையாகத் தனித்த மின் நிலையத்துக்கு அந்த அந்தஸ்தைவழங்கியது. வங்கதேசத்தில் ஆட்சி மாறியதும், ஏற்றுமதிக்காக மட்டுமே கட்டப்பட்ட அந்த நிலையம்உள்நாட்டிலும் மின்சாரம் விற்க விதிகள் மாற்றப்பட்டன.

3. விமான நிலையங்கள் : விமான நிலையத் தனியார்மயமாக்கல் ஏலத்துக்கு முன், விமான நிலைய நிர்வாகஅனுபவம் கட்டாயம் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது. அனுபவமே இல்லாத அதானி குழுமம் ஆறு விமான நிலையங்களைக் கைப்பற்றியது.

4. நிலக்கரிச் சுரங்கங்கள்: 204 நிலக்கரிப் படுகை ஒதுக்கீடுகளை உச்சநீதிமன்றம் 2014-இல் ரத்து செய்த பிறகும்,மோடி அரசு கொண்டுவந்த விதியின் கீழ் அதானி குழுமத்துக்கு மட்டும் சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டதாக,ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் புலனாய்வு அம்பலப்படுத்தியது.

5. தாராவி: மும்பை தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தில், தொடக்கத்தில் ஆட்சேபம் தெரிவித்த மகாராஷ்டிரநகர்ப்புற வளர்ச்சித் துறையே, அதானிக்குச் சாதகமாக விதிகளைத் தளர்த்தி அறிவிக்கை வெளியிடநிர்ப்பந்திக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

6.தாராலியின் பழைய ரகசியங்கள்: அதானிகிரீன் நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தவர் ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நீர்மின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் உறுப்பினராக்கப்பட்டார்; அக்குழுவின் முதல் கூட்டத்திலேயே தாராலி பரிசீலனைக்கு வந்தது. திட்டத்தின் சுற்றுச்சூழல்தாக்க அறிக்கையில் வேறு மாநில நீர்த்தேக்கங் களின் பெயர்கள் இடம்பெற்று, ‘நகலெடுத்து ஒட்டப்பட்டது’ எனஅம்பலமானது. தங்கள்நிலங்கள் முறையின்றிக் கையகப்படுத்தப் பட்டதாக சதாரா விவசாயிகள் குரல் எழுப்பினர்.

இந்தியாவில் சூரிய மின் ஒப்பந்தங்களு க்காக அதிகாரிகளுக்குப் பல நூறு கோடி லஞ்சம் கொடுக்கத் திட்டமிட்டதாக, அமெரிக்க நீதித்துறை 2024 நவம்பரில் கவுதம் அதானி மீது குற்றம் சுமத்தியது. அதானி குழுமம் அதை மறுத்தது. ஆனால், இந்தியாவில் ஒரு விசாரணைகூட நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரே முறைதான்: விதி தடையாக இருந்தால் விதியை மாற்று; நிபந்தனை சுமையாக இருந்தால் கணக்கை மாற்று.

புலிகளுக்குச் சேர வேண்டிய பணம்; மக்களின் சொத்து

சஹ்யாத்ரி புலிகள் காப்பகம் மேற்கு மகாராஷ்டிரத்தின் ஒரே புலிகள் காப்பகம். நிலையான புலிகள் எண்ணிக்கையே இல்லாத அக்காப்பகத்துக்கு, தடோபா, பென்ச் காப்பகங்களிலிருந்து ஒவ்வொரு புலியாகக் கொண்டுவந்து விட்டு, உயிர்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கிறது வனத்துறை. 2026 பிப்ரவரியில்தான் மூன்றாவது பெண் புலி அங்கு விடப்பட்டது. அப்படிப்பட்ட காப்பகத்துக்குச் சேர வேண்டிய சுமார் ரூ.225 கோடி, ஒரு பக்கக் காகிதத்தில் காணாமல் போயிருக்கிறது.

மின் கட்டணம் சில நூறு ரூபாய் தாமதமானால் ஒரு சாதாரண விவசாயியின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. வங்கிக் கடனில் ஒரு தவணை தவறினால் ஏழையின் வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ் வருகிறது. ஆனால் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனம், ரூ.225 கோடியை ஒரு பிரமாணப் பத்திரத்தின் மூலம் தானே தள்ளுபடி செய்துகொள்கிறது; அரசு அதற்கு முத்திரை குத்துகிறது. இதுதான் ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சியின் உண்மை முகம். கூட்டுக் களவாணிகளின் ராஜ்ஜியம்.

விசாரணையா, கண்துடைப்பா?

சதாரா மாவட்டக் கௌரவ வனவிலங்குக் காப்பாளர் ரோஹன் பாட்டே அக்டோபர் 30 அன்று பிரதமரின் குறைதீர் இணையதளத்திலும், மாநில அரசின் ‘ஆப்லே சர்க்கார்’ இணையதளத்திலும் புகார் அளித்த பிறகுதான் விவகாரம் வெளியே வந்தது. இவ்வளவு பெரிய திட்டத்தை இந்தச் செலவில் கட்டவே முடியாது, இந்த முடிவை ரத்து செய்து பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என அவர் கோரியுள்ளார். நவம்பர் 6 அன்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் விசாரிக்குமாறு மாநில வனத்துறைக்கு உத்தரவிட்டது; ஆனால் வனவிலங்குப் பாதுகாப்பு மாநிலப் பொறுப்பு என்று சொல்லித் தன் கையை யும் கழுவிக்கொண்டது. பொய்யை ஏற்றுக்கொண்ட அதே வனத்துறையே தன்னைத் தானே விசாரிக்கும் இந்த ஏற்பாடு, கண்துடைப்பு அல்லாமல் வேறென்ன?

அதானி நிறுவனமோ, திட்டம் தனியார் நிலத்தில் அமைகிறது, வன நிலம் இல்லை, நீர்நிலைகள் ஈரப்பதத்தைக் கூட்டும் என்றெல் லாம் விளக்கம் அளிக்கிறது. ஆனால் 99 சதவீதம் குறைத்தது ஏன் என்ற ஒரே கேள்விக்குமட்டும் பதில் இல்லை.

வேண்டியவை

7.திருத்தப்பட்ட மதிப்பை ஏற்ற அக்டோபர் 12 உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

8.ரூ.227 கோடி முழுவதையும் அபராதத்துடன் அதானி நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும்.

9.பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்கள் மீதும், அதை ஏற்ற அதிகாரி கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.பணம் முழுமையாகச் செலுத்தப்படும் வரை, தேசிய வனவிலங்கு வாரிய அனுமதி யை நிறுத்தி வைக்க வேண்டும்.

11.அதானி குழுமத்துக்காக வளைக்கப்பட்ட அனைத்து விதிமாற்றங்கள் குறித்தும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்.

காடும், புலிகளும், நீரும், நிலமும் மக்களின் பொதுச் சொத்து. அவற்றைக் காக்க விதிக்கப்பட்ட நிபந்தனையையே ஒரு பெருநிறுவனம் தனக்கு வசதியாக மாற்றி எழுதிக்கொள்ள முடிகிறது என்றால், இந்த நாட்டில் சட்டம் யாருக்காக இயங்குகிறது?