அதானிக்காக தாராவியில் மக்களை துரத்தும் பணி தொடக்கம்
13 Jun 2026, 9:03 pm

அதானிக்காக தாராவியில் மக்களை துரத்தும் பணி தொடக்கம்

ஆசியாவின் மிகப்பெரிய குடி சைப் பகுதியான தாராவியை மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு, பிரத மர் மோடியின் நெருங் கிய நண்பரான அதா னிக்கு தாரை வார்த் துள்ளது. சுமார் 2.39 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந் துள்ள இந்த தாராவி பகுதியில் பெரும் பான்மையானவர்கள் பல தலைமுறைக ளாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்கள் ஆவர்.

நிவாரணம்

இந்நிலையில், தாராவியை சர்வதே சத் தரத்திலான நவீன நகரமாக மாற்றுவ தாக கூறி ரூ.95,790 கோடி மதிப்பில் அதானி குழுமத்திடம் அப்பகுதியை மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசாங்கம் ஒப்படைத்துள்ளது. இந்த திட்டத்தில் அதானி குழுமம் 80 சதவீதப் பங்கு களையும், மகாராஷ்டிர அரசின் குடிசை மறுவாழ்வு ஆணையம் 20 சதவீதப் பங்குகளையும் கொண்டுள்ளன. தற்போது தாராவியில் வசித்து வரும் தகுதியுடைய அனைத்துக் குடும்பங் களுக்கும் 350 சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடி வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அறிவித்து, அப்பகுதி மக்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி வீடுகளை உடனடியா கக் காலி செய்து ஒப்படைக்க முதற் கட்டமாக ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தற்காலிகமாக வேறு இடங்களில் வாடகைக்கு தங்குவதற்காக மாதம் ரூ.22,000 வாடகைப்படியும் அறி விக்கப்பட்டுள்ளது.

சற்று பெரிய வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 வரை வாடகைப்படி உயர்த்தி வழங்கப்படும். புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சாவிகள் ஒப்ப டைக்கப்படும் வரை இந்த மாதாந்திர வாடகைப்படித் தொகை தொடர்ந்து பய னாளிகளின் கணக்கில் செலுத்தப்பட வுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.