தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதானி சிமெண்ட் ஆலையின் தூசி மாசுபாடு! தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வாலிபர் சங்கம் மனு

24 Sept 2026, 11:42 pm
அதானி சிமெண்ட் ஆலையின் தூசி மாசுபாடு! தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வாலிபர் சங்கம் மனு

அதானி சிமெண்ட் ஆலையின் தூசி மாசுபாடு! தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வாலிபர் சங்கம் மனு

கோவை, செப்.24-கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம் குரும்பபாளையம் பகுதியில் இயங்கி வரும் ஏசிசி-அதானி சிமெண்ட் ஆலையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சிமெண்ட் தூசியால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதால், மக்களின் நலனை பாதுகாக்க வலியுறுத்தி, புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு தபால் மனு அனுப்பும்போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழனன்று ஈடுபட்டனர்.

இம்மனுவில், வீடுகள், உணவு மற்றும் குடிநீரில் சிமெண்ட் தூசி படிவதால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுள்ளது. குரும்பபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளதென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களில் தூசி படிவதால் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது. ஏற்கனவே அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் செப்.23 ஆம் தேதியன்று அப்பகுதி பொதுமக்கள் ஆலை முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.

எனவே ஆலையின் செயல்பாடுகள், காற்று, குடிநீர், நிலத்தடி நீர் மற்றும் மண் தரம் குறித்து சுயாதீன அறிவியல் ஆய்வு நடத்த வேண்டும். தூசி கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக செயல்படுகின்றனவா, சுற்றுச்சூழல்விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் சட்ட நடவடிக்கை மற்றும்சுற்றுச்சூழல் நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, ஆய்வு முடிவுகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நிரந்தர தீர்வு காண தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.முன்னதாக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முக கவசம் அணிந்து அதானி சிமெண்ட் ஆலைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ்ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மதுக்கரை ஒன்றியச் செயலாளர் எம்.பஞ்சலிங்கம், வாலிபர் மாவட்ட நிர்வாகிகள் குருசாரதி, சக்திவேல், ரெனித் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வராஜ், மதுக்கரை சிபிஎம் கிளை செயலாளர் பத்மநாபன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அகமது ஜில்பிகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.