தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதானி சிமெண்ட் ஆலை தூசியால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள் போராட்டம் - உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

24 Sept 2026, 1:48 am
அதானி சிமெண்ட் ஆலை தூசியால் சுகாதார சீர்கேடு  பொதுமக்கள் போராட்டம் - உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

அதானி சிமெண்ட் ஆலை தூசியால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள் போராட்டம் - உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

கோவை, செப். 23–மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஏசிசி சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் அடர் தூசியால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் ஆலை முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சிமெண்ட் ஆலை கழிவுத் தூசிகள் காற்றில் பரவி குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் வீடுகள் முழுவதும் சிமெண்ட் தூசி படிவதோடு, மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட தீவிர சுவாசப் பிரச்சனைகளால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நமது தீக்கதிர் நாளிதழிலும் விரிவாக கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகம் உரிய தலையீட்டை செய்யவில்லை என்றால் மக்களின் போராட்டத்தை தவிர்க்க முடியாது என தெரிவித்திருந்தோம். இந்நிலையில், பலமுறை புகாரளித்தும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆவேசமடைந்த குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதனன்றுசிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களை கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் ஆலைநிர்வாகத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தூசிப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை ஆலையை இயக்கக் கூடாது என பொதுமக்கள்தெரிவித்தனர்.பொதுமக்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, ஆலையின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நிர்வாகத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இச்சம்பவம் மதுக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.