ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில் எப்போது நின்று செல்லும்?
29 Jun 2026, 12:15 am

ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில் எப்போது நின்று செல்லும்?

ஆதம்பாக்கம் நிலையக் கட்டட உள்கட்டமைப்புகள் அனை த்தும் முழுமையாக முடி வடைந்துவிட்டன. மேலும், இதற்கு முந்தைய நிலையமான புழுதிவாக்க த்தில் ரயில்கள் நின்று செல்லும்போது, ஆதம் பாக்கத்தை மட்டும் ரயில் ்கள் கடந்து செல்வது இப்பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படு த்தியுள்ளது. நிலம் கைய கப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் 2008-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் நிறைவடை யவே 18 ஆண்டுகள் ஆகி யுள்ள நிலையில், தற்போது நிலையமும் முடங்கி யுள்ளது பயணிகளை விரக் தியடையச் செய்துள்ளது. சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையி லான பறக்கும் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு, கடந்த மார்ச் 14-ஆம் தேதி பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. இருப்பி னும், இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள ஆதம்பாக் கம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்வ தற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

காரணம் என்ன?

ஆதம்பாக்கம் ரயில் நிலையம் தண்டவாளத்தின் வளைவுப் பகுதியில் அமை ந்துள்ளது. இப்பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்த போது, வளைவு காரண மாக ரயில் பெட்டிகளுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடை வெளி பாதுகாப்பு விதிக ளுக்கு அப்பாற்பட்டு அதிக மாக இருப்பது கண்டறி யப்பட்டது. இது பயணி கள் ஏறி, இறங்கும்போது பெரும் ஆபத்தை ஏற்படுத் தலாம் என எச்சரிக்கப் பட்டது. இதன்காரணமாக, பாதுகாப்பு காரணங் களைக் கருதி அந்த நிலையத்தில் ரயில்கள் நிற்கத் தடை விதிக்கப் பட்டது. மேலும், சில வேகக் கட்டுப்பாடுகளும் நடை முறைப்படுத்தப்பட்டன.

தண்டவாளங்களின் வளைவு

கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்வே கட்டுமானப் பிரிவினர் இதற்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். பிளாட்பாரத்தை நீட்டித்து இடைவெளியைக் குறைப் பதா, அல்லது தண்டவாளங் களின் வளைவு அமைப் பிலேயே திருத்தங்களை மேற்கொள்வதா என்பது குறித்து தீவிர ஆலோச னைகளும், சீரமைப்புப் பணிகளும் நடந்து வருகின் றன. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகை யில், “ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மேடை உயரத்தை அதிகரிப்பதைத் தவிர, மற்ற அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிந்துவிட்டன. தற்போ துள்ள மேடை அமைப்பை, அகில இந்திய தர நிர்ணய நிலைக்கு ஏற்ப மாற்ற வேண்டியுள்ளது. இதற்கான வடிவமைப்பை ‘ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு’ வழங்க வேண்டும். அந்த வடிவமைப்பு கிடைத்த வுடன், ஒரு மாதத்திற்குள் மேடை அமைப்பு சரிசெய்ய ப்பட்டுவிடும். ஜூலை மாதத் திற்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள் ளோம்” என்று தெரிவித்தார்.

திறப்பு எப்போது?

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகை யில், “தற்போது பல்வேறு தொழில்நுட்பக் கூறுகள் மற்றும் சீரமைப்புப் பணி கள் ஒரே நேரத்தில் மேற் கொள்ளப்பட்டு வருகின் றன. பாதுகாப்பு விதிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால், ஆதம்பாக்கம் நிலையத் தில் ரயில்கள் எப்போது நின்று செல்லும் என்பதற் கான தேதியை தற்போதை க்கு உறுதியாக சொல்ல முடியாது என்றும்அவர் கூறினார். ரயில் நிலை யத்தில் உள்ள குறைகளை விரைந்து சரி செய்து ஆதம் பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை தெற்கு ரயில்வே விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.