தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் சுகந்தியை ஆதரித்து திரை கலைஞர் ரோகிணி பிரச்சாரம்

2 Oct 2026, 2:30 am
மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் சுகந்தியை ஆதரித்து திரை கலைஞர் ரோகிணி பிரச்சாரம்

மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் சுகந்தியை ஆதரித்து திரை கலைஞர் ரோகிணி பிரச்சாரம்

மதுராந்தகம், அக் 1-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிஇடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும்பி.சுகந்தியை ஆதரித்து திரைகலைஞர் ரோகிணி தொகுதி முழுவதும்பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைநேரில் சந்தித்து, கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பிரச்சனைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி சுத்தியல் அரிவாள்நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் திரைகலைஞர் ரோகிணிபேசுகையில், “மக்களுக்கு எந்தப்பிரச்சனை ஏற்பட்டாலும் தாமாகமுன்வந்து களத்தில் நிற்பவர்கள்கம்யூனிஸ்டுகள். பெண்களுக்கு எதிரான பாலியல்தொல்லைகள் உள்ளிட்டபிரச்சனைகளிலும், தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும்உரிமைகளை பெற்றுத் தருவதிலும்கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.மக்களின் பிரச்சனைகளைப் பற்றிதொடர்ந்து பேசினாலும், பல பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. சட்டமன்றத்திலும் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல்கொடுப்பவர்கள் மிகச் சிலரே உள்ளனர்.

எனவே, மக்களின் பிரச்சனைகளை அதிகம் பேசக்கூடியவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்புவது ஜனநாயகக் கடமையாகும். நம் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, சுகந்தியை சட்டமன்றத்திற்கு அனுப்பவேண்டும்”என்றார்.பிரசாரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.