நடிகர் விஜய் ஈரோடு பேச்சு திரைக்கதை வசனமும் கள்ள மவுனமும்!
20 Dec 2025, 2:23 pm

நடிகர் விஜய் ஈரோடு பேச்சு திரைக்கதை வசனமும் கள்ள மவுனமும்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஈரோட்டில் நடத்திய பொதுக் கூட்டம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது. “தீய சக்தி” - “தூய சக்தி” என்ற வசனத்தைப் பேசி, தனது கட்சி ரசிகர்க ளிடம் கைதட்டல் பெற்றுள்ளார். விஜய்யின் அரசியல் அணுகுமுறையில் மிகப்பெரிய முரண் அவர் எதை விமர்சிக் கிறார், எதை விமர்சிக்கத் தவறுகிறார் என்பதில் அடங்கியுள்ளது. திமுகவை “தீய சக்தி” என்று கடுமையாக விமர்சிக்கும் அதே நேரத்தில், திருப்பரங்குன்றத்தில் மதவாதி களின் அத்துமீறல்கள் போன்ற மிக முக்கி யத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் அவர் காட்டும் மவுனம் கவனிக்கத்தக்கது. பாஜகவை “கொள்கை எதிரி” என்று சொல்லும் விஜய், அவர்களின் கொள்கை களை நடைமுறையில் எதிர்ப்பதில்லை. “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது” என்று மழுப்பலாகப் பேசுவது யாருக்கும் உதவாது. மாநில சுயாட்சி, இயற்கைப் பேரிடர் நிவாரண நிதி மறுப்பு போன்ற தமிழகத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றிய அரசை விமர் சிக்காமல் இருப்பது, பெரியார், காமராஜர், அண்ணா ஆகியோரை வழிமொழியும் ஒரு வரிடம் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டுக்கு முரணானது. எங்கே நிற்கிறார்? தன்னைத் திராவிட அரசியலுக்கு மாற்றாக நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் அவர், “திராவிடம்” எனும் சொல்லின் ஆழ மான சமூக நீதிப் பரிமாணங்களை உள்வாங் காமல், அதை வெறும் ஊழல் புகார்களோடு மட்டுமே சுருக்கிப் பார்ப்பது அவரது அரசியல் பலவீனத்தையே காட்டுகிறது.

பெரியார் மற்றும் காமராஜரைத் தனது வழிகாட்டிகளாகக் கூறும் விஜய், அதே மேடை யில் பகவத் கீதையை முன்னிறுத்துவது ஒரு ஆபத்தான முரண்பாடு. “பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்” என்ற திருக்குறளின் சமத்துவத்திற்கும், வர்ணாசிரமக் கட்ட மைப்பைப் போதிக்கும் கீதைக்கும் இடை யிலான தத்துவப் போரில், விஜய் எங்கே நிற்கிறார்? ஒரு அரசியல் தலைவர் என்பவர் எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அதிகார மையங்களை எப்படி எதிர்க்கிறார் என்பதிலேயே அவரது அரசியல் நேர்மை அடங்கியிருக்கிறது. ஆனால், விஜய் தனது உரைகளில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைப் பற்றி ஒரு துளி கூடப் பேசாமல் தவிர்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், எளிய மக்களின் வாழ்வாதார மாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய அரசின் மறைமுக நகர்வுகள் போன்றவை குறித்து விஜய் மூச்சு கூட விட வில்லை. அணுசக்தி மசோதா மற்றும் நாட்டின் வளங்களைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சார்பு நிலைப் பாடுகள் பற்றி அவர் காட்டும் மவுனம், அவர் யாருடைய நலன்களைப் பாதுகாக்கத் துடிக்கி றார் என்ற ஐயத்தை எழுப்புகிறது. தரவுப் பிழைகளும் கற்பனை வாக்குறுதிகளும் விஜய்யின் ஈரோடு உரையில் வெளிப் பட்ட புள்ளிவிவரப் பிழைகள், ஒரு பொ றுப்புள்ள தலைவருக்குரிய அடையாளங்கள் அல்ல.

பள்ளிக்கல்வித் துறை மற்றும் மாண வர் இடைநிற்றல் (Dropout) குறித்து அவர் முன்வைத்த தரவுகள் 2017-18 காலகட் டத்தைச் சேர்ந்தவை. தனது பக்கத்தில் அப்போதைய கல்வி அமைச்சர் செங் கோட்டையனை வைத்துக்கொண்டு, அந்த அமைச்சரின் ஆட்சிக்காலத் தரவுகளையே இன்றைய ஆட்சியின் குறைகளாகச் சித்த ரிப்பது ஒரு தர்க்கரீதியான முரண். அதேபோல், “வாடகை வீட்டில் இருப்ப வர்களுக்குச் சொந்த வீடு தருவேன்” போன்ற அவரது வாக்குறுதிகள் எதார்த்தச் சூழலில், வெறும் ‘தேர்தல் காலக் கவர்ச்சி’யாகவே எஞ்சுகின்றன. நிலச் சீர்திருத்தம் குறித்தோ, கார்ப்பரேட்டுகளிடம் இருக்கும் நிலங்க ளைக் கையகப்படுத்துவது குறித்தோ பேசாமல், இவ்வளவு பிரம்மாண்டமான வாக்குறுதியை அவர் எப்படிச் செயல் படுத்தப் போகிறார்? இது உழைக்கும் மக்க ளை ஏமாற்றும் வெற்று முழக்கம் மட்டுமே. அதிமுகவின் இடத்தைக் கைப்பற்றும் கனவு மேற்கு மண்டலத்தில் விஜய் ஆற்றிய உரை, அவர் அதிமுகவின் வாக்கு வங்கியைத் தனதாக்கிக் கொள்ளத் துடிப்பதை உறுதி செய்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயல லிதாவின் செல்வாக்கை “பொதுச்சொத்து” என்று புகழ்வதன் நோக்கம், அதிமுகவின் தொண்டர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதுதான். திமுக எதிர்ப்பு எனும் ஒற்றைப் புள்ளியில் அதிமுகவோடு அவர் மேற்கொள்ளும் இந்த மறைமுகப் போட்டி தனக்கு பயன் படும் என நம்புகிறார். இதை அதிமுக ஒப்புக் கொள்கிறதா என்று அவர்கள் பேச வேண்டிய தருணம் இது.

செங்கோல் வழங்கு வது, சிம்மாசனத்தில் அமர்வது போன்ற நிலப் பிரபுத்துவ அடையாளங்களை அவர் முன்னி றுத்துவது, மக்களாட்சித் தத்துவத்திற்கு எதி ரான ஒரு தனிநபர் வழிபாட்டு அரசியலையே விதைக்கிறது. தீர்மானிக்கும் சக்தியா? வாக்குகளைப் பிரிக்கும் காரணியா? 2026 தேர்தலைப் பொறுத்தவரை, விஜய் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உரு வெடுப்பாரா என்பது கேள்விக்குறியே. தமிழ கத்தின் தற்போதைய தேர்தல் அரசியல் என்பது வலுவான கூட்டணிக் கட்டமைப்புக ளைச் சார்ந்தது. தனித்துப் போட்டியிடும் பட்சத்தில், விஜய் ஒரு ‘ஸ்பாய்லர்’ (Spoiler) பாத்திரத்தை வகித்து, எதிர்க்கட்சி வாக்குகளைச் சிதைப்பதன் மூலம் பாஜக வின் மறைமுக நகர்வுகளுக்கு உதவக் கூடும் என்றே தெரிகிறது. நிதி வெளிப்ப டைத்தன்மை இல்லாத பிரம்மாண்ட மாநாடு கள், பழைய அரசியல் ஊழல் முகங்களின் பின்னால் ஒளிந்துகொண்டு அவர்களைப் பயன்படுத்த முனைவது போன்றவை ஒரு ‘தூய அரசியலை’ முன்னெடுப்பதற்கான அடையாளங்கள் அல்ல.

தமிழக அரசியலுக்குத் தேவைப்படுவது வெறும் வசனம் அல்ல; மாறாக, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தும் ஒரு கொள்கை ரீதியான மாற்றமாகும். விஜய் தனது ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மவுனத்தைக்’ களைந்து, தொழிலாளர் நலச் சட்டங்கள், 100 நாள் வேலைத்திட்டம் போன்ற அடிப்ப டைப் பிரச்சனைகளில் தனது நிலைப் பாட்டைத் தெளிவாக அறிவிக்க தயாரா? வெறும் சினிமாத்தனமான வசனங்களும், திக்கித் திணறும் மேடைப் பேச்சுகளும் ஒரு போதும் மாற்று அரசியலாகாது. அதிகார வர்க்கத்திற்கும், கார்ப்பரேட் சக்திகளுக்கும், மக்கள் விரோத ஒன்றிய அரசுக்கும் எதிராகக் களத்தில் நின்று போராடாத எவரும் மக்கள் தலைவராக முடியாது.